மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

பெண்கள் கிரிக்கெட்: ‘நம்பர் ஒன்’ இடத்தில் இந்திய வீராங்கனை!

பெண்கள் கிரிக்கெட்: ‘நம்பர் ஒன்’ இடத்தில் இந்திய வீராங்கனை!

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் மீண்டும் முதலிடத்தை (762 புள்ளி) பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக எட்டாவது இடத்தில் இருந்த மிதாலிராஜ் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் (72, 59, 75 ரன்) அடித்ததன் மூலம் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார்.

2005ஆம் ஆண்டு முதன்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்த மிதாலிராஜ் கடைசியாக 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சத்தில் இருந்தார். தற்போது 8ஆவது முறையாக முதலிடத்தை அலங்கரிக்கிறார்.

இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ 758 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஒட்டுமொத்த சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டியைச் சேர்த்து) அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்துக்கு (10,337 ரன்கள், 317 ஆட்டங்கள்) முன்னேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வியாழன் 8 ஜூலை 2021