மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

சார்பட்டா பரம்பரை ரிலீஸ் தேதி !

சார்பட்டா பரம்பரை ரிலீஸ் தேதி !

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குநர் பா.ரஞ்சித், அடுத்தடுத்து மெட்ராஸ், கபாலி, காலா என மூன்று பெரிய ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டார்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’ , மற்றும் அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என தயாரிப்பாளராகவும் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது.

இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்த படைப்பு ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படத்தை நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஆர்யா லீட் ரோலில் நடித்திருக்கிறார். ஆர்யாவுடன் துஷாரா, பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா, கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 80களில் வடசென்னையில் பிரபலமான குத்துச்சண்டைப் போட்டியை மையமாகக் கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை எனும் குத்துச்சண்டைக் குழுவின் வெற்றித் தோல்வி பற்றிய படமாக படம் இருக்குமென்பது தெரிகிறது. ரஞ்சித்தின் ஃபேவரைட் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளி ஆகியோர் இந்தப் படத்திலும் பணியாற்றியுள்ளனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படம், திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதைய சூழலில் ஓடிடி ரிலீஸ் உறுதியாகியிருக்கிறது. பெரும் தொகைக்கு பிரைம் வீடியோ இந்தப் படத்தை வாங்கியுள்ளது. அதோடு, சார்பட்டா பரம்பரை வருகிற ஜூலை 22ஆம் தேதி பிரைம் வீடியோவில் தமிழ் & தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்பொழுது வெளியாகியுள்ளது.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

4 நிமிட வாசிப்பு

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வியாழன் 8 ஜூலை 2021