மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

தெலுங்கில் ஓடிடிக்கு எதிர்ப்பு!

தெலுங்கில் ஓடிடிக்கு எதிர்ப்பு!

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மொத்தமாக முடங்கிப்போனது திரையுலகம். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகியவற்றில் தியேட்டர்களைத் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கிவிட்டன. தியேட்டர்களில் படங்களை திரையிட வேண்டிய தயாரிப்பாளர்கள் அது சம்பந்தமான எந்த முன் ஏற்பாடுகளும் செய்யவில்லை . இதற்கிடையில் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி எந்த முடிவையும் அறிவிக்காத தயாரிப்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தியேட்டர்களைத் திறப்பதில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

திரையரங்கு உரிமையாளர்கள் தெலங்கானாவில் நடிகர்களாக, தயாரிப்பாளர்களாக, விநியோகஸ்தர்களாக இருக்கின்றனர். இருந்தபோதிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சில நிவாரண நடவடிக்கைகளை தயாரிப்பாளர்களிடம் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

அது சம்பந்தமாக நேற்று தெலங்கானா பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸின் பொதுக்குழு கூடியது. ஓடிடி தளங்களில் திரைப்படங்களை நேரடியாக வெளியிடக் கொடுப்பதை அக்டோபர் வரையில் நிறுத்த வேண்டும். தியேட்டர்களும் திரையுலகத்தில் ஒருங்கிணைந்த ஒன்று தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கில் சில பெரிய நடிகர்களின் படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த வருடம் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் வந்த போது இங்குள்ள தியேட்டர்காரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தற்போது யாரும் அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை.

-இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

வியாழன் 8 ஜூலை 2021