மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

டோனிக்கே சாதி ஷாட்: அப்டேட் குமாரு

டோனிக்கே சாதி ஷாட்: அப்டேட் குமாரு

கிரிக்கெட் தல டோனிக்கு இன்னைக்கு பிறந்தநாளு. உலகம் பூராவுலருந்தும் அவருக்கு பலபேர் வாழ்த்துக்களை சொல்லிக்கிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டுல ஒரு தம்பி டோனி எப்பவும் மஞ்ச சட்டை போட்டுக்கிட்டு தான் விளையாடுறாரு... அதனால அவரு நம்ம ஆளு அப்படின்னு ஒரு வாழ்த்து பதிவு போட அதுக்கு பின்னாடி பல பேரு சாதிசங்கக் கூட்டத்தையே நடத்தி முடிச்சுட்டாங்க. ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கிற டோனிக்கே நம்மாளுங்க அடிக்கிற சாதி ஷாட் தாங்க முடியல சாமி...

நீங்க அப்டேட் பாருங்க

சாய் பெருமாள்

தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் "அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்"_ ஓபிஎஸ்.

சாம்பிளுக்கு ஒரு நாலு நலன்களையாவது சொல்லுங்க தலைவரே.

amudu

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் 1.50 டன் இனிப்புகளைப் பெற்றுள்ளார். -பால் வளத்துறை அமைச்சர் நாசர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எல்லாருக்கும் தரலாம்ன்னு வாங்கி ஸ்டாக் வைத்திருப்பாரோ.

நாகராஜசோழன்.MA.MLA

தமிழ்நாட்டுக்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை.-அமைச்சர்

மா.சுப்ரமணியம்.

அண்ணன் வைகோ~

நான் போட்ட கேஸ் எல்லாம் வீணா போச்சா? பண்ணிய போராட்டம் எல்லாம் வீணா போச்சா..!?!?

balebalu

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மறதி நோய் ஏற்பட வாய்ப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை

முதல் வேலையா முக கவசம் போடத்தான் மறப்பாங்க !

James Stanly

ஆடி காரு சொகுசுல வராதா.. இது தெரியாம அது முன்னால நின்னு 2,3 செல்பி எடுத்துட்டேனேப்பா..

சரவணன். ℳ

தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் - ஓ.பி.எஸ்

அண்ணே..வெள்ளச்சாமி அண்ணே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.. புதுசா மத்திய அமைச்சர் பதவி தர்றாங்கல்ல..அதுக்கு உங்க மகன் பேரை விட்டுட்டு யார் யாரையோ அமைச்சராக்கலாம்னு பேசிக்கிட்டு இருக்காங்க..

தர்மஅடி தர்மலிங்கம்

ஒன்றிய அரசு முழுமையான அளவு தடுப்பூசிகளை வழங்கவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கூட விளையாடுறதே அவங்களுக்கு வேலையா போச்சு!

Jino Kee

சொகுசு கார் விடயத்தில்

'ஆடி' அடங்கிவிட்டது!

மயக்குநன்

கடவுள் என்னைக் கைவிடமாட்டார்!- சசிகலா.

குமாரசாமியைச் சொல்றாங்களா... குன்ஹாவைச் சொல்றாங்களா..?!

கோழியின் கிறுக்கல்!!

நான் உன்னை சொகுசு காராக நினைத்துக் கொண்டிருக்க,

நீயோ என்னை ஏனோ Audi காராக நடத்துகிறாய்!?

தர்மஅடி தர்மலிங்கம்

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம்! செய்தி.

பெட்ரோல் விக்கிற விலைக்கு இனி எப்பவும் சைக்கிள்ல தான் பாஸ் பயணம் செய்யணும்!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

எங்க சொந்தத்துல misunderstanding-ஏ வந்ததில்லை மாமா..

ஏன் கம்யூனிகேசன் எல்லாம் அவ்வளவு கரெக்டா இருக்குமா மாப்ள..?

கம்யேனிகேசனா..? ஏழெட்டு வருசமா பேச்சு வார்த்தையே கிடையாது மாமா..

-லாக் ஆஃப்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

வியாழன் 8 ஜூலை 2021