மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

நண்பேன்டா ; சரியான நேரத்தில் சந்தானத்துக்கு உதவி செய்த ஆர்யா

நண்பேன்டா ; சரியான நேரத்தில் சந்தானத்துக்கு உதவி செய்த ஆர்யா

காமெடியனாக எக்கச்சக்கப் படங்களில் அசத்தி வந்த சந்தானம் ஹீரோவாக மாறியதுக்குப் பிறகு வருடத்துக்கு ஒரு படம் வெளியாவதே பெரிய சவாலாகிவிட்டது.

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சந்தானம். அதன்பிறகு வெளியான இனிமே இப்படித்தான் படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. சந்தானத்துக்கு ஹீரோவாக நல்ல ஓபனிங் கொடுத்த படம் ‘தில்லுக்குத் துட்டு’. அதன்பிறகு, கவனம் ஈர்த்தப் படம் ‘A1’. சென்ற வருடம் வெளியான டகால்டி, பிஸ்கோத் படங்கள் இரண்டுமே வியாபார ரீதியாக தோல்விப் படமே.

இந்த வருடத்தில் ‘A1’ இயக்குநரின் அடுத்தப் படமான ‘பாரிஸ் ஜெயராஜ்’ வெளியாகி கொஞ்சம் கவனம் ஈர்த்தது.

சந்தானம் ஹீரோவாக நடித்து சில படங்கள் வெளியாக முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. அதாவது, டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் மற்றும் சபாபதி படங்கள் ரிலீஸில் கொஞ்சம் சிக்கல் நிலவுகிறது. பொதுவாக, ஒரு ஹீரோவுக்கு படங்கள் வெளியாகாமல் கிடப்பில் கிடந்தால், அது அடுத்தடுத்தப் புதுப் படங்களைப் பாதிக்கும். வியாபாரத்திலும், சம்பளம் பெறுவதிலும் ஹீரோவுக்கு சிக்கலாகும்.

இந்நிலையில், ஒவ்வொரு படத்தின் சிக்கலையும் சரி செய்து, ரிலீஸ் செய்யும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம். முதல்கட்டமாக, சபாபதி திரைப்படத்தை வெளியிடும் பணிகள் நடந்துவருகிறது.

இயக்குநர் அறிவழகனிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீனிவாச ராவ் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தினை நேரடியாக டிஜிட்டலில் ப்ரீமியர் செய்வதற்கான பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்கிறது.

அதோடு, படத்தின் சேட்டிலைட் உரிமையையும் விற்பனை செய்துவிட்டது படக்குழு. சந்தானத்தின் சபாபதி படத்தின் ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் டிவி கைப்பற்றியிருக்கிறது. இந்தப் படத்துக்காக சுமார் 4 கோடி கொடுத்திருக்காம் கலர்ஸ் டிவி.

சந்தானம் படத்துக்கு இந்த விலை பெரிய விஷயம் என்கிறார்கள் டிரேடிங் வட்டாரத்தினர். அதுமட்டுமல்ல, இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது.

எப்படி, கலர்ஸ் டிவிக்கு சென்றார்களென்றால், சந்தானத்தின் நண்பர் ஆர்யா ஏற்கெனவே கலர்ஸ் டிவிக்கு நிகழ்ச்சி செய்திருக்கிறார். அதனால், கலர்ஸூடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். சந்தானத்துக்காக ஆர்யா தலையிட்டு பேசி, பெரும் தொகைக்கு முடித்துக் கொடுத்திருக்கிறார்.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 8 ஜூலை 2021