மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

ஹரிஷ் கல்யாணின் ‘ஸ்டார்’ படம் டிராப்புக்கான காரணம்!

ஹரிஷ் கல்யாணின் ‘ஸ்டார்’ படம் டிராப்புக்கான காரணம்!

தமிழில் ஒன்றிரண்டு படங்களில் தலை காட்டியிருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படம் மிகப்பெரிய ஹிட்டானது.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிக்க காதலும் காதல் நிமித்தமுமாக உருவான படம் ‘பியார் பிரேமா காதல்’. இந்தப் படத்தை இளன் எனும் புதுமுக இயக்குநர் இயக்கியிருந்தார். இந்தக் கூட்டணி பெரிதாக ஒர்க் அவுட் ஆனதால், மீண்டும் ஒரு படத்துக்காக இணைந்தனர்.

இளன் இயக்கத்தில் யுவன் இசையில் ஹரிஷ்கல்யாண் நடிக்க உருவாகிவந்த மற்றுமொரு படம் ‘ஸ்டார்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தளபதி ரஜினி லுக், சிவப்பு ரோஜாக்கள் கமல் லுக் & kal ho naa ho படத்தின் ஷாரூக் லுக் என மூன்று கெட்டப்புகளில் ஹரிஷ் இருப்பது போன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியது.

இந்தப் படம் சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு, படத்துக்கான பாடல்களை யுவன் இசையமைத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்தப் படத்தில் ஒரு ஹீரோவின் மூன்று காலக் கட்டத்தைக் காட்ட இருப்பதாகவும், ஹீரோக்களின் வாழ்க்கை, மகிழ்ச்சி, சோகம் என அனைத்தையும் பேச இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதன்பிறகு, இந்தப் படம் நகரவே இல்லை. படம் குறித்த எந்த தகவலும் இல்லாமல், கிணற்றில் போட்ட கல்லாக மாறியது.

தற்பொழுது, விசாரித்தால் ஸ்டார் படம் டிராப் ஆனதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் இயக்குநர் இளன் என்கிறார்கள். பெரிய ஹீரோ ஒருவரை இயக்க பெரிய பட்ஜெட் படத்தில் ஒப்பந்தமாகியிருக்காராம் இளன். அதில் கவனம் செலுத்த இருப்பதால், இந்தப் படத்தை அப்படியே போட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.

ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

புதன் 7 ஜூலை 2021