மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

ஒரே லுக்கில் இரண்டு படம் : தனுஷின் ஷூட்டிங் ப்ளான்!

ஒரே லுக்கில் இரண்டு படம் : தனுஷின் ஷூட்டிங் ப்ளான்!

ஹாலிவுட் படமான க்ரே மேன் ஷூட்டிங் முடித்துவிட்டு சமீபத்தில் இந்தியா வந்த தனுஷ், தற்பொழுது ஹைதராபாத்தில் இருக்கிறார். அங்கு கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாளவிகா மோகனுடன் நடித்துவரும் தனுஷ் 43 படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் முடித்த கையோடு, யார் இயக்கத்தில் நடிப்பார் என்று பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கான பதில் கிடைத்துவிட்டது. இரண்டு படங்களை ஒரே நேரத்தில் துவங்குகிறாராம் தனுஷ். சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் மித்ரன் ஜவகர் இயக்கும் தனுஷ் 44 படமும், செல்வராகவன் இயக்கத்தில் தாணு தயாரிக்கும் ‘நானே வருவேன் படமும் துவங்குகிறது. இதில், மித்ரன் படத்துக்காக நீண்ட நாளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைகிறது. இந்தப் பக்கம் செல்வா- தனுஷ் கூட்டணி இணைவதே ரசிகர்களுக்கு ட்ரீட் தான்.

இரண்டு படம் ஒரே நேரத்தில் உருவானால் கெட்டப், லுக் போன்றவற்றில் சிக்கல் வருமா என விசாரித்தால், இரண்டு படத்துக்கும் ஒரே கெட்டப் தானாம். உதாரணமாக, பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பின் போது அசுரன் படப்பிடிப்பும் நடந்தது. பட்டாஸ் பிளாஷ்பேக் காட்சியில் தனுஷ் லுக்கும், அசுரன் படத்தின் லுக்கும் ஒன்றாக இருக்கும். அப்படித்தான், மித்ரன், செல்வராகவன் படத்திலும் ஒரே லுக்கில் தனுஷ் வருகிறாராம்.

ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பைத் துவங்குகிறார்கள். இதில், மித்ரன் படம் 40 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்கிறார்கள். இவ்விரு படங்களும் முடித்த கையோடு, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் படத்தில் இணைகிறார் தனுஷ். தமிழ், தெலுங்கு & இந்தி என டிரைலிங்குவலாக உருவாக இருக்கிறது.

மற்றுமொரு புது அப்டேட்டும் இருக்கிறது. மீண்டும் ஒரு புதுப் படம் அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார் தனுஷ். சித்தாரா எனும் பிரபல தெலுங்கு பட நிறுவனம் தமிழ் - தெலுங்கில் தனுஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் படத்தை வெங்கி அட்லூரி எனும் இயக்குநர் இயக்க இருக்காராம். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான ரங்தே படத்தை இயக்கியவர். இந்தப் படத்தை டிஎஸ்பி தான் இசையமைத்தார். அதனால், தனுஷ் படம் உறுதியானால் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது. விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ஆதினி

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதன் 7 ஜூலை 2021