மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

துருவ நட்சத்திரம் ரிலீஸ் செய்ய புது தீர்வு.. இதாவது கைகூடுமா?

துருவ நட்சத்திரம் ரிலீஸ் செய்ய புது தீர்வு.. இதாவது கைகூடுமா?

கெளதம் மேனனின் படங்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு இருக்கும். எந்த அளவுக்கென்றால், படம் வெளியாகாமல் தள்ளிப் போனாலும் ரசிகர்கள் மறக்காமல் ட்விட்டரில் கெளதம் மேனனிடம் அப்டேட் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படி, நீண்ட நாளாக கிடப்பில் கிடந்த ஒரு படம் தனுஷ் நடித்த `எனை நோக்கிப் பாயும் தோட்டா`. இப்படம் தயாராகி நான்கு வருடங்களுக்குப் பிறகு வெளியானாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

அதுபோல, கெளதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாளாக கிடப்பில் கிடக்கும் இன்னொரு படம் `துருவ நட்சத்திரம்`. ஸ்டைலிஷாக விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டீஸர் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்துவர்மா, டிடி , சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதோடு, கெளதம் - தாமரை - ஹாரிஷ் ஜெயராஜ் மேஜிக்கல் காம்போவில் வெளியான சிங்கிள் பாடலும் செம ரீச் ஆனது.

படம் மட்டும் இன்னும் முடிந்தபாடில்லை. உண்மையிலேயே துருவநட்சத்திரத்தில் என்ன பிரச்னை என விசாரித்தால்? கெளதமுக்கும் விக்ரமுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுதான் என்கிறார்கள். க்ளைமேக்ஸ் எழுதாமல் ஷூட்டிங் செல்பவர் கெளதம். ஆனால், க்ளைமேக்ஸ் ஷூட்டுக்கான ஸ்கிரிப்ட் கேட்கிறார் விக்ரம். இதனால், துவங்கிய உரசல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

அதோடு, பொன்னியின் செல்வன், கோப்ரா, சியான் 60 என தொடர்ச்சியாக பிஸியாக இருக்கிறார் விக்ரம். அதுபோல, கெளதமும் நடிகராக வெற்றிமாறனின் விடுதலை, ஜி.வி.பிரகாஷின் செல்பி, நடன இயக்குனர் சாண்டி இயக்கும் படங்களில் பிஸியாக இருக்கிறார். அதோடு, சூர்யா நடிக்க நவரசா, சிம்புவுக்கு நதிகளில் நீராடும் சூரியன் என இயக்குநராகவும் பிஸியாக இருக்கிறார்.

இப்படியிருக்கையில் துருவ நட்சத்திரம் எப்படி வெளியாகும் என விசாரித்தால் புது தகவல் கிடைக்கிறது. இப்படம் முடிய இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு எடுக்க வேண்டியிருக்கிறது. தற்பொழுது, இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துவிட முடிவு செய்திருக்கிறார்களாம். இதுவரை எடுத்த காட்சிகளை வைத்து ட்விஸ்டுடன் முதல் பாகத்தை வெளியிட்டுவிடலாம். அதன்பிறகு, இரண்டாம் பாகத்தை வெளியிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம்.

சரி, இரண்டாம் பாகம் சாத்தியமா? ஒரு படத்தின் வெற்றியே இரண்டாம் பாகத்தை நிர்ணயிக்கிறது. பாகுபலி மாதிரியான படங்கள் இதற்கு விதிவிலக்கு. ஆக, முதல் பாகத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு வந்தால் மட்டுமே, துருவ நட்சத்திரம் 2 எடுக்கும் மனநிலைக்கு வந்துவிட்டாராம் தயாரிப்பாளர்.

-தீரன்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

புதன் 7 ஜூலை 2021