மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

வலிமை பர்ஸ்ட் லுக் ஜூலை 15 வெளியிடக் காரணம்!

வலிமை பர்ஸ்ட் லுக் ஜூலை 15 வெளியிடக் காரணம்!

சமூக வலைதளங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வலிமை படத்துக்குத் தான். ஏனெனில், சமீபத்தில் அதிகப்படியாக வலிமை பட ஹேஷ் டேக் டிரெண்டாகியிருக்கிறது. ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருப்பது 'வலிமை அப்டேட்' தான்.

அஜித் நடிக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் 95% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும், ஒரு சில ஆக்ஷன் சீக்குவன்ஸூகள் மட்டுமே மீதமிருக்கிறது.

அஜித்துடன் ஹூமா குரேஷி, யோகிபாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். படத்தின் ரிலீஸூக்கு முன்பாக விபாயாரம் சூடு பிடித்து நடந்துவருகிறது.

சினிமா டிரேடிங் வட்டாரத்தில் சூடு பிடிக்கத் துவங்கியிருக்கும் வலிமை, ரசிகர்கள் மத்தியிலும் சூட்டைக் கிளப்ப தயாராகிவருகிறது. சமீபத்தில் அஜித்தை சந்திக்க போனிகபூர் சென்னை வருகிறார் என்று முந்தைய செய்திகளில் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி, அஜித் - போனி கபூர் சந்திப்பு நடந்துமுடிந்தது.

இந்த மாதம் வலிமை முதல் பார்வை போஸ்டரை வெளியிடும் திட்டத்திற்கு படக்குழு வந்திருக்கிறது. அதன்படி, ஜூலை 15ஆம் தேதி பர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறதாம்.

ஏன் ஜூலை 15 என விசாரித்தால், அஜித்தின் முந்தைய படமான நேர்கொண்டப் பார்வை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாள். அதுமட்டுமின்றி, வியாழக்கிழமை என்பதால் அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமென்டில் வெளியிட வேண்டுமென்பதாலும் பொருத்தமாக இருக்கும் என அந்த நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, படத்தின் ரிலீஸூக்கு முன்பான வியாபாரத்தில் 200 கோடி வசூலாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பர்ஸ்ட் லுக் வெளியானால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு, பட வசூலுக்கு கூடுதல் பலமாக அமையும்.

-தீரன்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

புதன் 7 ஜூலை 2021