மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

விஜய்யின் முதல் மூன்று சாதனைகள்!

விஜய்யின் முதல் மூன்று சாதனைகள்!

விஜய் நடிக்கும் படம், அல்லது அவர் சம்பந்தப்பட்ட ஒரு தகவல் ட்விட்டரில் வெளியிட்ட பின், அது என்ன சாதனையைப் படைக்கப் போகிறது என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

செய்தி, புகைப்படங்கள், இவற்றைப் பொதுவெளியில் கொண்டு செல்வதற்கு சமூக ஊடகங்களைத் திரைத் துறையினர் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், கடந்த சில வருடங்களாகவே ட்விட்டர், யு டியூப் இவை இரண்டும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஏனென்றால் இவை இரண்டிலும் எண்ணிக்கை துல்லியமாகத் தெரிந்துவிடும்.

டிஜிட்டல் கலாச்சாரத்தில் அதனை மொத்த ஜனத்தொகையில் எவ்வளவு பேர் பயன்படுத்துகின்றனர் என்பதைக் காட்டிலும் விருப்ப எண்ணிக்கையும், பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை மட்டுமே இங்கு சாதனைகளுக்குச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படுகிறது

அந்த வகையில் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களையும் நடிகர் விஜய் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். நான்காவது இடத்தை தற்போது பீஸ்ட் பிடித்திருக்கிறது.

ட்விட்டரில் நடிகர் விஜய்க்கென ஒரு அதிகாரப்பூர்வ பக்கம் உள்ளது. அந்தப் பக்கத்தில் மிக மிக முக்கியமான தகவல்களை மட்டுமே பதிவிடுவார்கள். விஜய் படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதனை அவர்களது பக்கங்களில் பதிவிட்டாலும் விஜய் ட்விட்டர் பக்கம்தான் சாதனைகளைப் படைக்கும் தளமாக இருக்கும்.

ட்விட்டர் தளத்தில் அதிகபட்ச விருப்பங்களைப் பெற்ற புகைப்படம், போஸ்டர் என்ற முதல் மூன்று சாதனைகளை விஜய் படங்கள் தான் வைத்திருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் விஜய் மரம் நட்ட புகைப்படங்கள் 4,72,000 விருப்பங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் 2020ம் ஆண்டு நடைபெற்ற போது ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் 4,53,000 விருப்பங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மாஸ்டர் படத்தின் முதல் பார்வை 3,08,000 விருப்பங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

தற்போது பீஸ்ட் படத்தின் முதல் பார்வை 3,06,000 விருப்பங்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது முதல் மூன்று இடங்களையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக விஜய் ரசிகர் மன்றம் தரப்பிலிருந்து தகவல் தொழில்நுட்ப அணி ஒன்று பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

புதன் 7 ஜூலை 2021