மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

தமிழில் சோனி லிவ் புதுப் படங்களின் மெகா திட்டம்!

தமிழில் சோனி லிவ் புதுப் படங்களின் மெகா திட்டம்!

தமிழில் புதுப் பாய்ச்சலில் இயங்கி வருகிறது சோனி லிவ் ஓடிடி. பாலிவுட் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான சோனி லிவ் ஓடிடி தளமானது தமிழில் தொடர்ச்சியாகப் படங்களை வெளியிடத் தயாராகி வருகிறது.

முதல்கட்டமாக, கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண்குமார், அபர்ணதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தேன். சர்வதேச விருதுகளை குவித்த இந்தப் படமானது, கடந்த ஜூன் 25ம் தேதி சோனிலிவ் ஓடிடியில் வெளியானது. படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இரண்டு வாரத்துக்கு ஒரு புதுப்படம் ப்ரீமியர் செய்துவிடும் திட்டத்தில் இருக்கிறதாம் சோனி லிவ்.

அதன்படி, சோனி லிவ்வின் அடுத்த ரிலீஸ் வாழ். அருவி பட இயக்குனர் அருண் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘வாழ்’. கிட்டத்தட்ட 100க்கும் மேல் இடங்களில் 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்த வாழ் படம் சோனி லிவ்வில் வருகிற ஜூலை 16ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறதாம். புதுமுக நடிகர்கள் பிரதீப், பானு, தீவா, யாத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஜூலை 30ஆம் தேதிக்கு விஜய்சேதுபதியின் கடைசி விவசாயி படத்தை ஸ்ட்ரீம் செய்ய இருக்கிறார்கள். காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை என வரிசையாக ஹிட் கொடுத்து கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மணிகண்டன். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. இந்த படத்தில் வித்தியாசமான ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவருடன் மற்றுமொரு முக்கிய ரோலில் யோகி பாபு நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, சோனி லிவ் ரிலீஸூக்குத் திட்டமிட்டிருக்கும் படம் ‘திட்டம் இரண்டு’ . வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரி ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறாராம். விக்னேஷ் கார்த்திக் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியிருக்கிறதாம். முன்னதாக, முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து ’க/பெ.ரணசிங்கம்’ படம் ஓடிடியில் வெளியாகி பெரிய ஹிட்டானது. தொடர்ந்து, ‘திட்டம் இரண்டு’ ஓடிடிக்கு வருகிறது. எப்படியும், ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தப் படம் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

- ஆதினி

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

செவ்வாய் 6 ஜூலை 2021