மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

ஷூட்டிங் துவங்குவதில் நடிகர்களின் மனநிலை !

ஷூட்டிங் துவங்குவதில்  நடிகர்களின் மனநிலை !

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்பொழுது, இரண்டாம் அலை கொஞ்சம் கட்டுக்குள் வந்திருப்பதால் தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பும் சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது.

ஜூலை முதல் நாளிலிருந்து படப்பிடிப்புக்குத் தயாரான நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்க ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. முதல் கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிந்ததைத் தொடர்ந்து, சென்னையில் பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பைத் துவங்கிவிட்டனர்.

சென்னை ஷெட்யூலை முடித்துவிட்டு வட இந்திய மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்த கொரோனா சூழலானது அனைத்தையும் மாற்றி விட்டதாகத் தெரிகிறது. பீஸ்ட் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் சென்னைக்குள் மட்டுமே நடக்க இருக்காம். அதற்காக, கோகுலம் ஸ்டுடியோ மற்றும் சில இடங்களென மொத்தமாக நான்கு இடங்களில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதுபோல, சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சூர்யா 40’ . இந்தப் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், காரைக்குடியில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர். சமீபத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டுவந்தார் சூர்யா. இவரின் படப்பிடிப்பிலும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

சூர்யா நடிக்கும் 39வது படமான த.செ.ஞானவேல் இயக்கும் படமும், பாண்டிராஜ் இயக்கும் சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் முடித்துவிட முடிவெடுக்கப்பட்டிருக்காம்.

விஷாலுக்கு இரும்புத்திரை, சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ படங்களைக் கொடுத்த பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் படம் சர்தார். இரண்டு ரோல்களில் கார்த்தி நடிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கார்த்தியின் கெட்டப் வித்தியாசமாக இருந்தது. இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை செட்டில் முடித்துவிட திட்டமாம். அதற்காக 2 கோடி ரூபாயில் பிரம்மாண்ட செட் ஒன்றும் தயாராகிவருகிறது. எப்படியும், இந்த வாரத்தில் படப்பிடிப்புக்குச் சென்றுவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்படி, விஜய், சூர்யா, கார்த்தி என பெரும்பாலான நடிகர்கள் தங்களின் படப்பிடிப்பை சென்னைக்குள் முடித்துவிடவே திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் கொரோனா என்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தலால் நடிகர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது. வெளி மாநிலங்களில் படப்பிடிப்புக்குச் சென்று, அதனால் கொரோனா வந்துவிடும் என்கிற அச்சத்தால் சென்னைக்குள்ளேயே பாதுகாப்பாகப் படப்பிடிப்பு நடத்திவிட நினைக்கிறார்கள். அதனால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் திட்டமிட்ட சில படங்கள் கூட, இப்போது சென்னை பக்கம் திரும்பியிருக்கிறதாம்.

- தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

4 நிமிட வாசிப்பு

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

செவ்வாய் 6 ஜூலை 2021