மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி : கல்லூரி மாணவன் கைது!

நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி : கல்லூரி மாணவன் கைது!

பிரபல நடிகைக்கு ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பிய கல்லூரி மாணவனை சென்னை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டில், மிஸ் தென்னிந்தியா என்ற பட்டம் பெற்ற சனம் ஷெட்டி தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்தவர். பிக் பாஸ் 4வது சீசன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் இவருக்கு மர்மநபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக அடையார் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

இதுகுறித்து அடையார் துணை ஆணையர் விக்ரம் தலைமையில் சிறப்பு டீம் விசாரணை நடத்தியது. அதில், நடிகைக்கு ஆபாச படம் அனுப்பியது திருச்சியில் உள்ள பிரபல கல்லூரியில் எம்.ஏ படிக்கும் மாணவர் ராய் ஜான் பால் என்பது தெரிய வந்தது. பெங்களூரில் பதுங்கியிருந்த ராயை சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர்.

மாணவனை விசாரித்ததில் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல தெரிந்ததால் மருத்துவர்களிடம் அழைத்து சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வணங்காமுடி

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

செவ்வாய் 6 ஜூலை 2021