மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

மணிரத்னத்தால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகர் !

மணிரத்னத்தால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகர் !

மணிரத்னத்தின் கனவுத் திட்டம் ‘பொன்னியின் செல்வன்’. ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களும் உருவாவதால் படப்பிடிப்பு பணிகள் நடந்துவருகிறது.

கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்துவருகிறார்.

இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கியது. அதன்பிறகு, சென்னை & பாண்டிச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அதன்பிறகு கொரோனாவினால் துவங்காமல் இருந்த படப்பிடிப்பு பிப்ரவரியில் ஒரு மாதத்துக்கு மேலாக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான மூன்று செட்களில் துவங்கி, வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை ஜெய்ப்பூர் பகுதியில் ஏப்ரலில் துவங்க திட்டமிட்டிருந்தது. அதற்குள் கொரோனா இரண்டாம் அலை காரணமாகப் படப்பிடிப்பு துவங்கவில்லை. லைகா நிறுவனத்துடன் இணைந்து படத்தைத் தயாரித்துவருகிறார் மணிரத்னம். 500 கோடி பட்ஜெட்டில் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடிகர் விஜயகுமாரை நீண்ட தாடியுடன் பார்க்க முடிந்தது. இதுகுறித்து விசாரிக்கும் போது, பொன்னியின் செல்வனில் நடிக்க இருப்பதாகவும், அதற்கான கெட்டப் எனவும் அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து பொன்னியின் செல்வன் படக்குழுவில் விசாரித்தால் வேறு தகவல் கிடைத்தது.

பொன்னியின் செல்வனில் முக்கிய ரோலில் நடிக்க விஜயகுமாரை தாடி வளர்க்கச் சொன்னாராம் மணிரத்னம். அதனால், இவரும் தாடி வளர்த்திருக்கிறார். பொன்னியின் செல்வன் டீம் படப்பிடிப்பும் அவ்வப்போது நடத்திக் கொண்டிருந்தது. விஜயகுமாரும் ஆறு மாதத்துக்கும் மேலாக காத்திருந்திருக்கிறார். ஆனால், மணிரத்னம் தரப்பிலிருந்து விஜயகுமாருக்கு எந்த அழைப்பும் வரவில்லையாம். விஜயகுமாருக்குச் சொன்ன ரோலில் வேறு ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவரும் நடித்துக் கொடுத்தும் விட்டாராம். இந்த ஏமாற்றத்தால் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம். மணிரத்னம் இப்படி செய்யலாமா?

-தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

செவ்வாய் 6 ஜூலை 2021