மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

வலிமை படம் ரிலீஸூக்கு முன்பே 200 கோடி வசூல்!

வலிமை படம் ரிலீஸூக்கு முன்பே 200 கோடி வசூல்!

அஜித் நடிக்க சுமார் இரண்டு வருடங்களாக உருவாகிவரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன் இசையில் வலிமை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

கொரோனா இரண்டாம் அலைக்கு முன்பே படத்துக்கான 95% படப்பிடிப்பும், அதற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடிந்துவிட்டது. வெளிநாடு ஷூட்டிங்கிற்கு திட்டமிட்டிருந்தார்கள். இப்போது இருக்கும் சூழலில், இந்தியாவுக்குள்ளேயே படத்தை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

படத்தின் பெயரைத் தவிர, படம் குறித்த எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியாகவில்லை. அதற்குள் படத்தின் வியாபாரம் சூடுபிடித்திருக்கிறது.

வலிமை படத்தின் ரிலீஸூக்கு முன்பான வியாபாரத்தில் 200 கோடி வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரிலீஸூக்கு முன்பாக, படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமை, சேட்டிலைட்ஸ், டிஜிட்டல், எஃப்.எம்.எஸ். உள்ளிட்டவற்றின் வியாபாரத்தில் 200 கோடி வசூலித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.O படமானது 370 கோடியும், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படமானது சுமார் 200 கோடியும் ரிலீஸூக்கு முன்பான வியாபாரத்தில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், வலிமை படத்தின் வியாபாரமும் சூடு பிடித்திருக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வலிமை படத்தில் நடித்திருக்கிறார் அஜித். விரைவிலேயே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, ஆயுத பூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி ரிலீஸ் செய்வதென முடிவெடுத்திருக்கிறார்கள்.

- தீரன்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

செவ்வாய் 6 ஜூலை 2021