மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

வலிமை படத் தகவலை வெளியிட்ட போலி ட்விட்டர் கணக்கு முடக்கம்!

வலிமை படத் தகவலை வெளியிட்ட போலி ட்விட்டர் கணக்கு முடக்கம்!

கொரோனா தொற்று தேசிய ஊரடங்கு, இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக சினிமா தொழில் முழுமையாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக படத் தயாரிப்புக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கூடுகிறதே என்கிற கவலையில் தயாரிப்பாளர் போனி கபூர் இருக்க, தேர்தல் கமிஷனரிடம்கூட அஜீத் ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டைக் கேட்டுவிட்டார்கள்.

அந்த அளவுக்கு அவர்களின் ஆர்வக்கோளாறு உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. நேற்றைய தினம் கன்னியாகுமரியில் சாமியாடி ஒருவரிடம் வலிமை அப்டேட்டைக் கேட்டு தங்கள் புத்திசாலிதனத்தை பறை சாற்றும் வகையில் "குமரி மாவட்ட தல ரசிகர்கள்"

எனும் பெயரில் உள்ள ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

சென்ற மாதத்தில் “மிக விரைவில் வலிமை படத்தின் அப்டேட் உங்களுக்குக் கிடைக்கும்” என்று அந்தப் படத்தின் இயக்குநரான ஹெச்.வினோத் சொன்னதாகச் செய்திகள் பரவின.

ஆனால், எதன் வாயிலாக அவர் அதைச் சொன்னார் என்பதை எந்த செய்தியிலும் ஊடகங்கள் உறுதிப்படுத்தவில்லை. தயாரிப்பாளர் போனி கபூரும் “விரைவில் சொல்கிறேன்” என்று மட்டுமே தனது ட்விட்டர் ஐடியில் தெரிவித்திருந்தார்.

இந்த நேரத்தில், “வலிமை படத்தின் அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டது. ஓவர்சீஸ் ரைட்ஸ், உள்ளூர் தியேட்டர்கள் ரைட்ஸ், சேட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் என்று அனைத்துமே முடிந்துவிட்டது” என்று @DirectorHVinoth என்ற ட்விட்டர் ஐடியில் வெளியிடப்பட்டிருந்தது.

இதை உண்மை என்று நம்பி ரீஷேர்களும், காப்பி பேஸ்ட்டுகளும், கமெண்ட்டுகளும் பறந்தன. ஆனால், கடைசியில் இயக்குநர் வினோத் பெயரிலான இந்த ஐடியும் போலி என்பதை அறிந்து இந்த ஐடியைத் தற்போது ட்வீட்டர் நிர்வாகம் முடக்கிவிட்டது.

ஆனாலும் இந்தச் செய்திக்கு கண், காது, மூக்கு வைத்து “ஒட்டு மொத்தமாக ‘வலிமை’ படத்தின் வியாபாரம் 200 கோடியைத் தாண்டிவிட்டது” என்று செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதற்கு ஹேஸ்டேக்காக #ValimaiRecordBusiness என்பதையும் கிரியேட் செய்துவிட... தற்போது இது இந்தியாவில் மிகப் பெரிய அளவில் டிரெண்ட்டாகிவிட்டது.

எப்படியோ, ‘வலிமை’ வந்தாலும் செய்திதான்... வராவிட்டாலும் செய்திதான் என்கிற நிலைமையே தற்போது வரையிலும் நீடித்து வருகிறது.

‘வலிமை’ படத்திற்காக இன்னமும் நான்கு நாட்கள் ஆந்திராவிலும் வெளிநாட்டில் மூன்று நாட்களுமாக மொத்தமாக ஏழு நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கான பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதை முடித்துவிட்டால் மற்ற வேலைகளை முடித்து ரிலீஸுக்குத் தயார் செய்துவிடுவார்களாம்.

-இராமானுஜம்

.

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 6 ஜூலை 2021