மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

பாபநாசம் 2-வில் கெளதமிக்குப் பதிலாக கடைசியில் இவரா?

பாபநாசம் 2-வில் கெளதமிக்குப் பதிலாக கடைசியில் இவரா?

ஒரு மொழியில் ஹிட்டாகும் திரைப்படங்கள் பிற மொழிகளில் ரீமேக் ஆவது இயல்பு. ஆனால், அதிக மொழிகளில் ரீமேக் ஆன திரைப்படமென்றால் அது த்ரிஷ்யம் தான்.

மோகன்லால் , மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர் படமாக வெளியானது. இந்தப் படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பினால் தெலுங்கு, கன்னடம் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ரீமேக் ஆனது.

தெலுங்கில் வெங்கடேஷ்-மீனா, கன்னடத்தில் ரவிச்சந்திரன் - நவ்யா நாயர், இந்தியில் அஜய் தேவ்கன் - ஸ்ரேயா நடித்திருந்தனர். தமிழில், கமல்ஹாசன் - கெளதமி நடிக்க பாபநாசம் எனும் பெயரில் வெளியானது. ஜிப்ரான் பின்னணி இசையமைக்க, ஜெயமோகன் படத்துக்கு வசனம் எழுதியிருந்தார்.

த்ரிஷயம் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் பிரைம் ஓடிடியில் வெளியானது. முதல் பாகம் போலவே, இரண்டாம் பாகமும் செம ஹிட்.. அதனால், இந்தப் படத்தின் ரீமேக்கும் துவங்கிவிட்டது.

முதலாவதாக, தெலுங்கில் வெங்கடேஷ் - மீனா நடிக்க படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து பாபநாசம் 2 பணிகளும் துவங்கியிருக்கிறது. ஜீத்து ஜோசப் இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் இருக்கிறார்.

முதல் பாகத்தில் கமலுடன் கெளதமி நடித்திருப்பார். தற்பொழுது, இருவரும் கருத்துவேறுபாட்டினால் பிரிந்துவிட்டதால், பாபநாசம் 2வில் யாரை நடிக்க வைப்பதென பெரும் குழப்பம் நீடிக்கிறது.

இந்தப் படத்தில் நடிக்க வைக்க மீனாவிடம் பேசியதாக ஒரு தகவல் உலாவியது. ஆனால், மீனாவிடம் இதுகுறித்து படக்குழுவிலிருந்து யாரும் பேசவில்லை என்பதே உண்மை.

நதியாவிடம் படக்குழு சார்பில் பேசியிருக்கிறார்கள். நதியாவின் கண்டிஷன்களும், ரூல்ஸூம் படக்குழுவினருக்கு செட்டாகவில்லை. குறிப்பாக, கமலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், நதியாவும் இல்லை என்கிறார்கள்.

இறுதியாக, கம்பெனி ஆர்டிஸ்ட் பூஜா குமாரை நடிக்க வைக்க முடிவெடுத்திருக்கிறார்களாம். கமலுடன் உத்தமவில்லன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 படங்களில் நடித்தவர் பூஜா குமார். உறுதியானால், நான்காவது முறையாக கமலுடன் நடிப்பார். இன்னும் சில நாட்களில் இந்த தகவல் உறுதியாகிவிடும் என்கிறார்கள்.

-தீரன்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

செவ்வாய் 6 ஜூலை 2021