மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

ராம்சரண் படத்துக்கு ஷங்கர் தேர்ந்தெடுத்த இசையமைப்பாளர்

ராம்சரண் படத்துக்கு ஷங்கர் தேர்ந்தெடுத்த இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். சின்ன பட்ஜெட்டில் படத்தை தயாரிப்பாரே தவிர, இயக்க மாட்டார். ஷங்கரின் கைவசம் மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் இருக்கிறது.

ஒன்று, லைகா தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் `இந்தியன் 2`. இந்தப் படத்தின் 65% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஷங்கருக்கும் லைகாவுக்கும் இடையிலான பனிப்போரினால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் லைகா தொடர்ந்த வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்படியும், இன்னும் இரண்டு மாதத்துக்குள் முடியும் என்கிறார்கள்.

இரண்டாவது, தெலுங்கு திரையுலகினரான தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்க இருக்கும் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்ட போது தான், லைகா நீதிமன்றத்துக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக தெலுங்கு நடிகருக்கு படமியக்க தயாராகிவருகிறார் ஷங்கர். தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் படம் உருவாக இருக்கிறது. பிற மொழிகளில் டப் செய்து வெளியிடவும் திட்டம். இந்தப் படத்தில் நாயகியாக அலியா பட் நடிக்க பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்கிறது.

கூடுதல் அப்டேட்டாக, படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல். பொதுவாக, ஷங்கர் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணியாற்றுவார்கள். சமீபத்திய தேர்வாக அனிருத் இருக்கிறார். அப்படியிருக்கையில், தமனை டிக் செய்திருக்கிறார் ஷங்கர்.

தெலுங்கு திரையுலகில் டாப் இசையமைப்பாளர் தமன். சமீபத்தில் அவர் இசையமைக்கும் படங்கள் செம ஹிட்டாகிறது. புட்டபொம்மா பாடலில் இந்தியளவில் ரீச் ஆகிவிட்டார். அதனால், தமனை தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மற்றுமொரு சுவாரஸ்யவிஷயம் என்னவென்றால், 2003ல் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தமன்.

ராம் சரண் படத்தை முடித்துவிட்டு, மூன்றாவதாக அன்னியன் பட ரீமேக்கை தெலுங்கில் இயக்க இருக்கிறார் ஷங்கர்.

ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

திங்கள் 5 ஜூலை 2021