மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

அப்பா ஆசை நிறைவேற நயன்தாரா திருமணம் செய்வாரா?

அப்பா ஆசை நிறைவேற நயன்தாரா திருமணம் செய்வாரா?

நான் கண்மூடுவதற்குள் உனக்கு ஒருகால் கட்டுபோட்டுட்டா இந்த கட்டை நிம்மதியா போய் சேரும்....

உன்னை ஒருத்தன் கையில் புடுச்சு கொடுக்கிறதுக்காகத்தான் உயிரை பிடிச்சுகிட்டு இருக்கேன்.....

இது போன்ற வசனங்கள் தமிழ் சினிமாவில் காலங்காலமாக குடும்ப படங்களில் இடம்பெற்று வருகின்றன இது போன்ற ஒரு காட்சி அட்லி இயக்குநராக அறிமுகமான ராஜா ராணி படத்தில் இடம்பெற்றிருக்கும் அப்பா சத்யராஜ் விருப்பத்தை நிறைவேற்ற நாயகன் ஆர்யாவை நாயகி நயன்தாரா விருப்பம் இன்றிதிருமணம் செய்துகொள்வார்.

அதே நயன்தாராவுக்கு நிஜ வாழ்க்கையில் திருமண நெருக்கடி சொந்த அப்பா மூலம் ஏற்பட்டிருக்கிறது.

நயன்தாராவின் அப்பா குரியன் கொடியத்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். பெரிய அளவில் தீவிர சிகிச்சைகள் எடுத்தும் அவர் முழுமையான நலம் பெறவில்லை என்கிறார்கள்.

அண்மையில் அவசரமாக தனிவிமானம் மூலம் நயன்தாரா கொச்சி சென்றது கூட தந்தையின் உடல்நலம் குன்றியதால் தான் என்றும் கூறப்படுகிறது.

நயன்தாராவின் அப்பா, மகளைத் திருமணக் கோலத்தில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.அதுகுறித்து பலமுறை அவரிடம் பேசியும் நயன்தாரா சாதகமான முடிவு எதையும் கூறவில்லை என்பதே அவரை மேலும் பலவீனப்படுத்தி வருகிறது எனக் கூறும் அவரது குடும்ப வட்டாரம்

அப்பாவின் உடல்நிலை குன்றியிருக்கும் நிலையில் அவருடைய ஆசையை நயன்தாரா நிறைவேற்றிவைத்தால் நல்லது என்று குடும்ப உறுப்பினர்கள் நயன்தாராவுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது .

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

திங்கள் 5 ஜூலை 2021