மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

திரையரங்கம் திறக்கப்படுவது எப்போது? எதிர்பார்ப்பும் நிதர்சனமும்!

திரையரங்கம் திறக்கப்படுவது எப்போது? எதிர்பார்ப்பும் நிதர்சனமும்!

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 15 மாதங்களாகவே திரையுலகம் இருண்டுக் கிடக்கிறது. அவ்வப்போது நம்பிக்கை ஒளி துளிர் விட்டாலும், கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தவிர்க்க முடியாது.

கொரோனா அச்சுறுத்தலால் முதல் லாக்டவுன் சென்ற வருடம் மார்ச் 24ஆம் தேதி போடப்பட்டது. அதற்கு முன்பாக, திரையரங்கில் கடைசியாக வெளியானது மூன்று படங்கள். ஒன்று, விக்ரம் பிரபுவின் அசுரகுரு, ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு மற்றும் சிபிராஜின் வால்டர். இந்த மூன்று படங்களும் வெளியான நான்கு நாட்களுக்குள் கொரோனாவினால் லாக்டவுன் வந்தது.

அதன்பிறகு, திரையரங்கு என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறவும், ஓடிடி எனும் டிஜிட்டல் தளமானது மேலெழத் தொடங்கியது. லாக் டவுனில் முதலாவதாக சூர்யா தயாரிக்க ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

அதன்பிறகு, கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி, ஐஸ்வர்யா ராஜேஷின் க/பெ.ரணசிங்கம் என நாயகிகள் முக்கியத்துவம் கொண்ட படங்களே அதிகமாக வெளியாகி வந்தன.

அதன்பிறகு, செப்டம்பரில் 50% இருக்கையுடன் திரையரங்கம் செயல்பட அனுமதி கிடைத்தது. இருப்பினும், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ பிரைம் வீடியோவில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் அலைக்குப் பிறகான தளர்வில் வெளியான எந்தப் படமும் பெரிதாக மக்களை திரையரங்கு பக்கம் அழைத்து வரவில்லை. ஆனால், இந்த வருடம் விஜய் நடிக்க ‘மாஸ்டர்’ ரிலீஸின் போதுதான் பெரும் ரசிகக் கூட்டம் திரையரங்குக்கு வந்தது.

கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன் படங்கள் எனத் திரையரங்குக்கு மக்கள் வரத் தொடங்கியபோது, கொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

தற்போது, இரண்டு மாத கடும் லாக்டவுனுக்குப் பிறகு தளர்வுகளை அறிவித்து வருகிறது தமிழ்நாடு அரசு. கடந்த தளர்வு அறிவிப்பில் திரையரங்கம் திறக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனுமதி தரப்படவில்லை. அதனால், திரையரங்கத்தினரும், தயாரிப்பாளர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அதற்கு காரணம் இருக்கிறதாம்.

தமிழகமெங்கும் ஒரேவித தளர்வுகள் தரப்படவில்லை. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால், சில மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திரையரங்கினை தமிழகம் முழுவதும் திறப்பதில் சிக்கல் இருப்பதால் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

பேருந்து, வணிகக் கடைகளானது மக்களுக்கு அத்தியாவசிய தேவை. சினிமாவானது பொழுதுபோக்கிற்கானது என்பதால் இப்போதைக்கு அனுமதி கிடைக்காது என்றே சொல்லப்படுகிறது.

ஜூலை 15 முதல் 50% இருக்கையுடன் திரையரங்கு செயல்பட அனுமதி கிடைக்கும் என்று திரையுலகம் எதிர்பார்க்கிறது. ஆனால், அரசு தரப்பில் விசாரித்தால் அந்தத் திட்டத்தில் இல்லை என்கிறார்கள். அதோடு, ஆகஸ்ட் மாதத்தில்தான் திரையரங்குக்கு அனுமதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 5 ஜூலை 2021