மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

ஓங்கியடிச்சா ஒன்னரை கிலோ ஸ்வீட்: அப்டேட் குமாரு

ஓங்கியடிச்சா ஒன்னரை கிலோ ஸ்வீட்: அப்டேட் குமாரு

ஓங்கியடிச்சா ஒன்னரை கிலோ வெயிட் தெரியுமா தெரியுமானு பேசுற சிங்கம் சினிமா வசனத்தை இன்னிக்கு, பசங்க மாத்திட்டாங்க. ஓங்கியடிச்சா ஒன்னரை கிலோ ஸ்வீட்டுடா தெரியுமா தெரியுமானு பேசிக்கிட்டிருக்காங்க. போன ஆட்சியில பால்வள அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆவின் நிறுவனத்துலேர்ந்து 1500 கிலோ ஸ்வீட் போயிருக்குதாம். ஓவர் ஸ்வீட் உடம்புக்கு ஆகாது, ஆட்சிக்குக்கும் ஆகாது., கட்சிக்கும் ஆகாது.

எனிவே... நீங்க அப்டேட் பாருங்க

Mannar & company

அப்பா: மொதல்ல ஒரு வேலையை தேடி வேலைக்கு போ பைக் வாங்கி தர்றேன்

மகன்: பைக்க நான் வாங்கிக்கிறேன் தினமும் பெட்ரோல் போட மட்டும் காசு கொடுத்தா போதும்.

amudu

முதல் லாக்டௌனில் முன்னேற தொடங்கியது. இரண்டாம் லாக்டௌனில் எதிர்பார்த்ததை விட அதிக முன்னேற்றம். மூன்றாம் லாக்டௌன் வந்தால் என்ன ஆகும் என்ற பயம் இப்போதே கண்ணில் நிழலாடத் தொடங்கிவிட்டது. தொப்பை பற்றி தான் பேசிக் கொண்டு இருக்கிறேன்.

செங்காந்தள்

மாணவர்கள் தங்களைக் கடந்தால் மாணவிகள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

மாணவிகளைப் பார்த்தால் மாணவர்கள் டூவீலரை வேகமாக ஓட்டுகிறார்கள்...!!!

நாகராஜசோழன்.MA.MLA.

சிலிண்டர் விலை உயர்வுக்கு குளிர்காலமே காரணம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

அமைச்சரே இவர் தான் மத்திய அரசில் இருக்கும் செல்லூர் ராஜூ வோ !!!

பர்வீன் யூனுஸ்

ஹீரோவின் ரசிகர்கள் மட்டும் FDFS பார்த்தால் படம் தியேட்டர் ரிலீஸ். எல்லா மக்களும் FDFS பார்த்தால் ஓ.டி.டி ரிலீஸ்.

நாகராஜசோழன்.MA.MLA

பிரதமரை சந்தித்து ஜெய்ஹிந்த் விவகாரத்தை கூறினோம் - எல்.முருகன்.

அப்போ பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு, தமிழகத்துக்கு வர வேண்டிய நிலுவை GST தொகை, பத்தி எல்லாம் வாய் திறக்கவே மாட்டீங்க...

balebalu

சிலிண்டர் விலை உயர்வுக்கு குளிகாலமே காரணம். மத்திய அமைச்சர்

அடுத்து என்ன ? வெய்யிலில் ஆவியாவதால் பெட்ரோல் விலை உயர்வுக்கு கோடை காலம் காரணம் , பஜ்ஜி போண்டா சாப்பிடுவதால் சமையல் எண்ணெய் விலை உயர்வுக்கு மழை காலம் காரணம் ! அதானே ?

மயக்குநன்

நீர் அடித்து நீர் விலகாது!- சசிகலா.

அந்த நீர் 'பன்னீர்'தானே..?!

மயக்குநன்

டெல்டா வகை கொரானோ வைரஸ் 100 நாடுகளில் பரவி இருப்பதால், தொற்று நோயின் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உலகம் உள்ளது!- உலக சுகாதார அமைப்பு.

இப்பல்லாம் '100'-ங்கிற நம்பரைக் கேட்டாலே பதட்டமாதான் இருக்கு..!

கோழியின் கிறுக்கல்!

சரியா பார்த்து தீருவதற்கு முன்னே வண்டிக்கு பெட்ரோலே போட முடியலை,

எப்படித் தான் பட்ஜெட்லாம் போட்டு குடும்பம் நடத்துறாங்களோ!?

-லாக் ஆஃப்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

ஞாயிறு 4 ஜூலை 2021