மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

திருமணத்தை ரத்து செய்த நடிகை!

திருமணத்தை ரத்து செய்த நடிகை!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, அது ஆயிரங்காலத்து பயிர் என்று கூறுவார்கள். ஆனால், திருமண நிச்சயதார்த்தமும், திருமணங்களும், கணவன் மனைவி என்கிற பந்தமும் கடைகளில் விலைக்கு வாங்கும் பொருள் பிடிக்கவில்லை என்றால் திருப்பிக் கொடுப்பது அல்லது குப்பையில் தூக்கி எறிவதை போன்று மாறி வருகிறது.

சினிமாவில் இதுபோன்ற செயல்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறி வருகின்றன. நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தவர் மெஹ்ரீன் பிர்சடா. தற்போது தெலுங்கில் F3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 2021 மார்ச் மாதத்தில் இவருக்கும், பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணத் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், நிச்சயதார்த்தம் நடைபெற்று மூன்று மாதத்துக்குப் பிறகு பவ்யாவைப் பிரிவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை மெஹ்ரீன் பிர்சடா.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது... 'நானும் பாவ்யாவும் பிரிகிறோம். எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் ரத்தாகிறது. எங்களின் திருமணமும் நடக்காது. இருவரின் நலன் கருதி இருவரும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இனி பவ்யா அவரது குடும்பத்தினருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. வழக்கமான என் பணிகளைத் தொடர்வேன். சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுப்பேன். என் தனிப்பட்ட சுதந்திரத்தை அனைவரும் மதிப்பீர்கள் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 4 ஜூலை 2021