மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

பாபநாசம் - 2 வில் இருக்கிறேனா?: மீனா

பாபநாசம் - 2 வில் இருக்கிறேனா?: மீனா

தமிழ் திரையுலகில் 1990 ஆம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை மீனா, ரஜினிகாந்த், கமலஹாசன், கார்த்திக், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் அஜீத்குமார், என எல்லோருடனும் நடித்தவர்.

தற்போது நடிகை மீனா இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இருக்கிறார். அவரை 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இன்ஸ்டாவில் பாலோ செய்து வருகின்றனர். மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக சமீபத்தில் கேள்வி பதில் ஒன்றை நடத்தினார்.

இதில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி, தயக்கமின்றி பதில் அளித்தார் மீனா. தன்னிடம் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கேள்விகளை கேட்கலாம் என்று அறிவித்த மீனா, ரசிகர்களிடம் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்ட கேள்விகளை பெற்றார். மீனா சிக்கலான கேள்விகளுக்கு கூட பொறுமை இழக்காமல், கோபப்படாமல் பக்குவமாக பதிலளித்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட ஒரு ரசிகருக்கு பதில் அளித்த மீனா, கணவருடன் மணக்கோலத்தில் இருக்கும் படத்தை பகிர்ந்து கொஞ்சம் லேட் என்று வேடிக்கையாக பதில் கொடுத்துள்ளார்.

இதுதவிர அவர் தனது நடிப்பில் வரவிருக்கும் படங்கள், திரைப்படத் துறை அனுபவம் மற்றும் அவரது மகள் நைனிகா பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார். தனது வயதை பற்றி கேள்வி எழுப்பிய ரசிகருக்கு “பெண்களின் வயதைக் கேட்பது நாகரிகமானதல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா” என்று பதில் அளித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் என்னைக்காவது சினிமாவுக்கு எதுக்காக வந்தோம்னு வருத்தப்பட்டு இருக்கீங்களா? என்று எழுப்பிய கேள்விக்கு பல தடவை என்று கண்ணில் கண்ணீர் வர சிரிக்கும் எமோஜியுடன் பதில் கூறி உள்ளார்.

மற்றொரு ரசிகர் நான் 20 ஆண்டுகளுக்கு முன் சென்று மீண்டும் பிறந்து உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியதற்கு, நல்ல ஆசை என்ற பொருள்படும்படி ஆவ் என்று குறிப்பிட்டுள்ளார் மீனா.

தனுஷ் அல்லது சிம்பு இருவரில் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு சாமர்த்தியமாக இருவரும் என்று பதில் அளித்துள்ளார்.

தமிழில் பாபநாசம் 2வில் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமலிடம் கேளுங்கள் என்று கூறி உள்ளார்.

-இராமானுஜம்

.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 4 ஜூலை 2021