மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

கைதி படத்தை ரீமேக் செய்ய தடை!

கைதி படத்தை ரீமேக் செய்ய தடை!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரிப்பில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று வெளியான படம் கைதி.

இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார். 2019 தீபாவளி அன்று விஜய் நடித்து வெளியான பிகில் படத்துடன் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெற்றது.

அதன் காரணமாக வேறு மொழிகளில் கைதி படத்தை ரீமேக் செய்யும் உரிமையை வாங்குவதற்கு போட்டி ஏற்பட்டது. இந்தி மொழியில் கைதி படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கைதி படத்தை ரீமேக் செய்வதற்கும், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கும் கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காரணம், கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர், 2007ஆம் ஆண்டு புழல் சிறையில் தனக்கு நேர்ந்த சம்பவங்களை தொகுத்து ஒரு கதையாக எழுதி அதை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடத்தில் சொல்லியதாகவும் கதை பிடித்ததால் அதைப் படமாக்கலாம் என்று கூறி அவருக்கு ரூ.10,000 அட்வான்ஸ் கொடுத்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு.

ஆனால், அதன்பிறகு அவரை இது சம்பந்தமாக அழைக்கவே இல்லையாம். இந்நிலையில் சமீபத்தில் கைதி படத்தைப் பார்த்த ராஜீவ் ரஞ்சன் தான் சொன்ன அதே கதையின் இரண்டாம் பாதியை அப்படியே கைதி படத்தில் வைத்து படமாக்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, தனக்கு நஷ்டஈடாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு 4 கோடி ரூபாய் தர வேண்டும் என்று கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.ஆர்.பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, கைதி படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யக் கூடாது, அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளார்.

-இராமானுஜம்

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

ஞாயிறு 4 ஜூலை 2021