மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

ரஜினி, விஜய், அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன்

ரஜினி, விஜய், அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன்

குறுகிய காலத்தில் உச்சத்தைத் தொட்ட நடிகர் சிவகார்த்திகேயன். 2019ல நம்ம வீட்டுப்பிள்ளை, ஹீரோ, மிஸ்டர்.லோக்கல் படங்கள் வெளியானது. சென்ற வருடம் எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த வருட ரிலீஸூக்கு இரண்டு படங்கள் தயாராகிவருகிறது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், வினய் நடிக்க அனிருத் இசையில் ‘டாக்டர்’ ரிலீஸூக்கு ரெடியாகிவிட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திரையரங்கில் வெளியாகுமா அல்லது ஓடிடிக்குச் செல்கிறதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இப்படத்துக்கு முன்பே துவங்கிய படம் ‘அயலான்’. இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படம் உருவாகிவருகிறது. அறிவியல் புனைவுத் திரைப்படமாக எக்கச்சக்க கிராஃபிக்ஸ் பணிகளுடன் படம் தயாராகிவருவதால் தாமதமாகிவருகிறது. இந்த வருட டிசம்பரில் அயலான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

தற்பொழுது, சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘டான்’. புதுமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி கோவையில் துவங்கியது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் மார்ச் மாதம் துவங்கியிருக்க வேண்டியது. கொரோனாவினால் நடக்கவில்லை.

மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகிவருகிறது டான் டீம். இரண்டாம் ஷெட்யூல் ஷூட்டிங் வருகிற ஜூலை 15ஆம் தேதி துவங்க இருக்கிறது. ஜூலை மாதத்திலிருந்து ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படப்பிடிப்புகள் துவங்குகிறது. அந்த லிஸ்டில் சிவகார்த்திகேயன் படமும் இணைகிறது.

- ஆதினி

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

ஞாயிறு 4 ஜூலை 2021