மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

விஷால் 31-ல் பிரபல மலையாள நடிகர் வில்லனானது எப்படி?

விஷால் 31-ல் பிரபல மலையாள நடிகர் வில்லனானது எப்படி?

சண்டைக்கோழி 2, அயோக்யா, ஆக்‌ஷன் மற்றும் சக்ரா என விஷாலுக்கு இறுதியாக வெளியான நான்கு படங்களுமே பெரிதாக ஹிட்டாகவில்லை. தொடர்ச்சியாகத் தோல்விப் படங்களால் சோகத்தில் இருக்கும் விஷால் அடுத்தடுத்து நடித்துவரும் படங்களின் மீது பெரும் நம்பிக்கையில் இருக்கிறார்.

விஷாலுக்கு அடுத்த ரிலீஸ் எனிமி. ஆர்யாவுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக மிர்ணாளினி ரவி நடித்திருக்கிறார். தமன் இசையில் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. இந்த வருடம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஷாலின் அடுத்தப் படத்தை புதுமுக இயக்குநர் சரவணன் இயக்கிவருகிறார். விஷாலின் 31வது படமாக தயாராகிவருகிறது. விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். யுவன் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது துவங்கிவிட்டது. தமிழகத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி இல்லாத நேரத்தில் ஹைதராபாத்துக்குச் சென்று படப்பிடிப்பை துவங்கினார் விஷால். தற்பொழுது, ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

புதுஅப்டேட்டாக, விஷால் 31 படத்தின் வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடித்துவருகிறார். படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதத்துக்குள் முடித்துவிட திட்டத்தில் இருக்கிறாராம் விஷால்.

மலையாள நடிகர் பாபுராஜ் 2004ல் அஜித்துடன் ‘ஜனா’ மற்றும் 2018ல் விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ படங்களில் நடித்தார். எப்படி, விஷால் படத்துக்கு வந்தார் என விசாரித்தால் புது தகவல் கிடைத்தது. பாபுராஜ் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘ஜோஜி’. ஃபகத்பாசிலுடன் நடித்திருந்த இப்படம் பிரைம் வீடியோவில் வெளியானது. இதில், இவரின் நடிப்பு பெரிதளவில் பாராட்டுப் பெற்றது. இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்திருக்கிறார் விஷால். பாபுராஜின் நடிப்பில் இம்ப்ரெஸ் ஆனவர், உடனடியாக போனில் அழைத்துப் பேசியிருக்கிறார். முதலில் முடியாதென்றே கூறினாராம். ஆனால், விஷால் 31 படக் கதையைக் கேட்டிருக்கிறார். கதைப் பிடித்த காரணத்தால் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

- தீரன்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

ஞாயிறு 4 ஜூலை 2021