மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

ஏ.ஆர்.முருகதாஸ் நினைப்பது நடக்கப் போகிறது !

ஏ.ஆர்.முருகதாஸ் நினைப்பது நடக்கப் போகிறது !

துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என மூன்று ஹிட்களை விஜய்க்குக் கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்க்கு நூறு கோடி க்ளப் வசூல் சாதனையை முதலாவதாகக் கொடுத்தவரும் இவரே. இருப்பினும், விஜய்யின் 65வது படத்தை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது.

விஜய் 65 படத்துக்கு முதலில் ஒப்பந்தமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், இவர் சொன்ன கதையில் விஜய் திருப்தியாகவில்லை. இதுவரை ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்தப் படங்களின் கலவையாக அந்தக் கதை இருந்ததால் ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்தார் விஜய். அதனால், சன்பிக்சர்ஸ் நிறுவனம் வேறு இயக்குநரைத் தேடியது. அதன்பிறகு, நெல்சன் படத்துக்குள் வந்தார். விஜய் 65 படமானது நெல்சன் இயக்க அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் படம் தயாராகிவருகிறது. பீஸ்ட் எனும் பெயருடன் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பையும் படக்குழு முடித்துவிட்டது. தற்பொழுது, இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் துவங்கி நடந்துவருகிறது.

விஜய் பட வாய்ப்பு நழுவியதிலிருந்தே சோதனை மேல் சோதனையைச் சந்தித்துவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினி நடிக்க இவர் இயக்கிய தர்பார் படமும் பெரிதாக போகவில்லை. விஜய் படமும் இல்லையென்றாகிவிட்டது என்பதால் அனிமேஷன் படத்தை துவங்க திட்டமிட்டார். ஆனால், அதுவும் டேக் ஆஃப் ஆகவில்லை. தெலுங்கு நடிகர் ராம் பெத்தனேனி படத்தை இயக்க இருந்தார். ஆனால், ராம் பெத்தனேனியை இயக்க லிங்கு சாமி தயாராகிவிட்டார்.

விஜய் படம் ஒப்பந்தமான நேரத்திலேயே அல்லு அர்ஜூனுக்கும் ஒரு படம் இயக்க சம்மதம் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அல்லு அர்ஜூனை தொடர்புகொண்டார் ஏ.ஆர்.முருகதாஸ். முதலில் இவரின் அழைப்பை அல்லு அர்ஜூன் ஏற்கவில்லை என்று சொல்லப்பட்டது. தற்பொழுது, இந்தப் படத்தை தயாரிக்க தாணு தயாராக இருக்கிறார். இவரின் வழியாக அல்லு அர்ஜூனிடம் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

ஏற்கெனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தை தாணு தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பது உறுதியாகிவிட்டதாகவே கூறுகிறார்கள். மகேஷ் பாபுவை ‘ஸ்டைபர்’ படம் மூலமாக தமிழுக்கு அழைத்துவந்தவர், அல்லு அர்ஜூனுக்கும் நேரடி தமிழ் - தெலுங்கு படத்தை இயக்க இருக்கிறாராம்.

அல்லு அர்ஜூனுக்கு சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ எனும் திரைப்படம் PAN இந்தியா ரிலீஸாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் படம் துவங்க வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

சனி 3 ஜூலை 2021