மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

பொண்ணுக்கு செகண்ட் டோஸ்: அப்டேட் குமாரு

பொண்ணுக்கு செகண்ட் டோஸ்:  அப்டேட் குமாரு

பொண்ணுக்கு என்ன போடுவீங்கனு போன்ல பேசிக்கிட்டிருந்தாரு கல்யாண புரோக்கரு. என்ன பதில் வந்துச்சுனு தெரியலை, திடீர்னு செல்போனாலயே தலையில அடிச்சுக்கிட்டாரு. அப்படி என்ன சொல்லிட்டாங்கனு கேட்டேன். ‘அட ஏன் தம்பி.... ‘ஃப்ர்ஸ்ட் டோஸ் போட்டாச்சு. கல்யாணத்துக்குள்ள செகண்ட் டோஸும் போட்டு அனுப்பி வைக்கிறோம்’னு பொண்ணோட அப்பா சொல்றாரு’னு சொல்லிட்டு சிரிக்கிறாரு. நல்ல அப்பாதான், நீங்க அப்டேட் பாருங்க.

ச ப் பா ணி

நதிகளை இழந்த மீனும்,

நெட் கார்டு முடிந்த ஆணும் ஒன்றுதான்.!

சரவணன். ℳ

மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க ஈ பாஸ் நடைமுறை ரத்து! - தமிழக அரசு.

ஈ பாஸ் நடைமுறையிலா இருந்துச்சு, ஏன்டா சொல்லவே இல்ல...!

amudu

ஆணவத்துக்கு தடுப்பூசி இல்லை. -ஹர்ஷ் வர்தன்.

கொரோனாவுக்கு தடுப்பூசி இருக்கும் தானே. அதையாவது கொடுங்க சார்.

balebalu

முன்பு :கார் வெச்சிருந்தா வசதியா இருக்கிறவன்

இப்போ : பெட்ரோல் போட்டா வசதியா இருக்கிறவன்

மயக்குநன்

கல்லூரிகளில் 'ஆகஸ்ட் மாதத்தில்' மாணவர் சேர்க்கை தொடக்கம்!- அமைச்சர் பொன்முடி.

அதுக்குள்ள... எல்லாருக்கும் கொரோனாகிட்ட இருந்து 'விடுதலை' கிடைச்சா சரிதான்..!

ரஹீம் கஸ்ஸாலி

ஒருவர் போன் பேசி முடித்தவுடன் பக்கத்திலிருப்பர் 'யார் போன்ல?' என்று கேட்பதும் இப்போது அனிச்சை செயலாகிவிட்டது.

நாகராஜசோழன்.MA.MLA.

”ஜூலை 5க்கு பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று விட்டு, உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன்” .- வி.கே.சசிகலா

இந்த தடவையும் 3 வாட்டி சாமாதில அடிப்பாங்களோ!!!

mohanram.ko

தனி ஒரு மனிதனுக்கு பெட்ரோல் இல்லையெனில், பைக்கினை விற்றிடுவான்

balebalu

சீனாவை ஒடுக்க நினைப்பவர்களை அடித்து நொறுக்குவோம்!- சீன அதிபர் ஜின்பிங்

அது என்னவோ சரிதான் ! உலகத்தையே வாயை மூட வெச்சுட்டாங்களே

தர்மஅடி தர்மலிங்கம்

பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துல ஆறாயிரம் "பெட்ரோலுக்கு" விளங்கிடும்!

மயக்குநன்

'ஆத்ம நீர் பாரத்' திட்டத்தால் மத்திய அரசுக்கும், மக்களுக்கும் இடையிலான தூரம் குறைந்திருக்கிறது!- மோடி.

'சமூக இடைவெளி'யை மறந்துவிட வேண்டாம் மன்னா..!

கோழியின் கிறுக்கல்!!

மழை தரும் மேகத்தை ரசிப்பது,

நாம் காரில் பயணிக்கிறோமா, இல்லை இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறோமா என்பதைப் பொருத்தே அமைகிறது!!

லாக் ஆஃப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

சனி 3 ஜூலை 2021