மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

வலிமை வெளிநாடு ஷூட்டிங் ரத்தா?

வலிமை வெளிநாடு ஷூட்டிங் ரத்தா?

விஜய்க்கு மாஸ்டர் துவங்கிய காலக்கட்டத்தில் அஜித்துக்கு வலிமை படமும் துவங்கியது. லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் வெளியாகி பெரிய ஹிட்டாகிவிட்டது. விஜய்யும் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், அஜித்துக்கு வலிமை இன்னும் வெளியாகவில்லை.

வலிமை படத்தின் கதை, படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடங்கள் உள்ளிட்டவற்றினால் படப்பிடிப்பு எடுப்பதில் பல சிக்கல்களைச் சந்தித்தது வலிமை டீம். அதோடு, கொரோனா அச்சுறுத்தலால் படம் இன்னும் முடிந்தபாடில்லை.

சொல்லப்போனால், அஜித்தின் வலிமை மர்மமாகவே இருக்கிறது. ஏனெனில், படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதோடு சரி, வேறு எந்த அப்டேட்டும் படக் குழுவிடமிருந்து வரவில்லை. பொதுவாக, விஜய் மாதிரியான பெரிய ஹீரோக்களின் படங்களின் அப்டேட்டை அவ்வப்போது தயாரிப்பு தரப்பு கொடுத்துக் கொண்டிருக்கும். அப்படியான, எந்த அப்டேட்டும் வலிமை படக்குழு தரவில்லை.

நமக்குக் கிடைத்த தகவல்படி, ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் வலிமை படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது. வெளிநாடு ஷெட்யூல் மட்டுமே மீதமிருந்தது. அதற்கான ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல இருந்தது படக்குழு. அதற்குள், கொரோனா இரண்டாம் அலையால் படக்குழு வெளிநாடு போகமுடியாமல் தவித்து வந்தது. இந்நிலையில், படத்தை வெளிநாட்டில் எடுக்கிறார்களா அல்லது உள்நாட்டிலேயே முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறாரா என்பது புரியாமல் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார். படக்குழுவுக்கும் இந்த குழப்பம் நீண்ட நாளாக இருந்து வந்திருக்கிறது.

இறுதியாக, வெளிநாடு ஷூட்டிங்கை இந்தியாவிலேயே முடித்துவிட முடிவெடுத்திருக்கிறார்கள். வெளிநாடு செல்வதில் இருக்கும் சிக்கல், அதற்கு ஆகும் செலவு, நேர விரயம் ஆகியவற்றை மனதில் கொண்டு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்துவிட திட்டமாம். இந்த ஷூட்டிங்கில் அஜித் & காலா நாயகி ஹூமா குரேஷி கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பட ரிலீஸ் குறித்து விசாரித்தால், ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிடும் திட்டத்தில் இருந்தனர். அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தீபாவளியில் அண்ணாத்த வருவதால், அதற்கு முன்பாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். தீபாவளிக்கு முன்பாக, பண்டிகை தினமென்று பார்த்தால் ஆயுத பூஜை வருகிறது. அதனால், ஆக்டோபர் 14ஆம் தேதியில் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘ஆர் ஆர் ஆர்’ படமும் இதே நாளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- தீரன்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

சனி 3 ஜூலை 2021