மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

லைகா நிறுவனத்தின் மனுக்கள் தள்ளுபடி!

லைகா நிறுவனத்தின்  மனுக்கள் தள்ளுபடி!

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்தின் படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு நிறுவனங்களின் படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை கோரியும், உத்தரவாத தொகை செலுத்தக் கோரியும் லைகா தரப்பில் இரு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று (ஜூலை 2) விசாரணைக்கு வந்தது, அப்போது, லைகா தரப்பில், “படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறோம். ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருக்கிறது.

இயக்குநர் ஷங்கருக்கு ஏற்கனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதத் தொகையை வழங்கவும் தயாராக இருக்கிறோம். கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது”. எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இயக்குநர் ஷங்கர் தரப்பில், படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், லைகா நிறுவனம் படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியது.

படப்பிடிப்புக்கு அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. இதற்கிடையில் நடிகர் கமலுக்கு ஏற்பட்ட மேக் அப் அலர்ஜி, இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது.

மேலும், படப்பிடிப்பை மீண்டும் துவங்கினால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்து கொடுக்க தயார் எனத் தெரிவிக்கபட்டது. இந்த வழக்கில் இருதரப்புக்கும் இடையே தீர்வு காணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இடைக்கால மனுக்கள் மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, லைகாவின் இரு இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.முன்னாள் நீதிபதி பானுமதி மத்தியஸ்தர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பிரதான வழக்கு விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

-இராமானுஜம்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

சனி 3 ஜூலை 2021