மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

கட்சிய கைப்பத்தப் போறீங்களா?: அப்டேட் குமாரு

கட்சிய கைப்பத்தப் போறீங்களா?: அப்டேட் குமாரு

'எல்லாத்தையும் சரிபண்ணிடலாம்ப்பா... நான் வந்துடறேன்...கொரோனா முடியட்டும் வந்துடறேன்ப்பா, ஒண்ணும் கவலைப்படாதீங்க'னு பக்கத்து வீட்டு அக்கா வாசல்ல நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க. எனக்கு பகீர்னு ஆயிடுச்சு. 'என்னக்கா அதிமுகவை கைப்பத்தப் போறீங்களா?'னு கேட்டேன். ஒரு மாதிரியா முறைச்சுப் பாத்தவங்க, 'லூஸு...நான் எங்கப்பாகிட்ட பேசிட்டிருக்கேன்'னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.

நீங்க அப்டேட் பாருங்க‌...

amudu

தமிழக அரசு தற்காலிக இடம் வழங்கினால் எய்ம்ஸ் வெளிநோயாளிகள் பிரிவு மதுரையில் தொடங்கப்படும். -மத்திய அரசு.

ஒரு செங்கலை மட்டும் கொடுத்து, அதை எய்ம்ஸ் மருத்துவமனைன்னு சொன்னது போல, ஒரு ஸ்டெதஸ்கோப்பை மட்டும் கொடுத்து, இது தான் வெளிநோயாளிகள் பிரிவுன்னு சொல்லிட மாட்டீங்களே.

பர்வீன் யூனுஸ்

ரேடியோவில் பேசினால் அது மோடி. ஆடியோவில் பேசினால் அது சசி.

நாகராஜசோழன்.MA.MLA

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாயைத் தாண்டியது.

ஏறிக்கொண்டே இருப்பது

~பெட்ரோல், டீசல் ,கேஸ் விலை

ஏறாமல் இருப்பது

~ அடித்தட்டு மக்கள் வருமானம்

amudu

டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்களுடன் பிரதமர் நாளை உரையாடுகிறார்.

அம்பானி, அதானி கூட உரையாடுவார் போல.

செங்காந்தள்

கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன். காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்.

இரண்டையும் பாக்கெட் செய்து இருந்தால் எந்தக் காலத்திலும் விற்கலாம்.

திமிரழகி

பேசத்தெரியாமல் அல்ல !

பேசி ஓன்றும் ஆகப்போவதில்லை என்ற முன் அனுபவமே அமைதியாக வேடிக்கை மட்டும் பார்க்கச்சொல்கிறது.

மயக்குநன்

மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்!- எடப்பாடி பழனிசாமி.

அதுக்கு... அணில்களை எல்லாம் நாடு கடத்தணுமே..?!

ச ப் பா ணி

அவசரத்துக்கு எழுத ஆண்டவனால் படைக்கப்பட்ட note pad தான் இடது கை

தர்மஅடி தர்மலிங்கம்

நீட்’ குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்: மா.சுப்பிரமணியன்!

எதிர்கட்சி ஆனாலே எல்லாரும் தவறான தகவல பரப்ப ஆரம்பிச்சுடுவாங்க போல..

மயக்குநன்

2020 லாக்டௌன்- சின்னம்மா எப்போ ரிலீஸ்..?

2021லாக்டௌன்- சின்னம்மா ஆடியோ ரிலீஸ்..!

கோழியின் கிறுக்கல்!!

Sofaல படுத்து ஏதாவது பிடிச்ச படம் பார்க்கும் போது சொக்கிகிட்டு வரும் தூக்கம்,

சரி தூங்கலாம்னு எழுந்து போய் படுக்கையில் படுத்தால் பறந்து விடும்!!

-லாக் ஆஃப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வெள்ளி 2 ஜூலை 2021