மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

டி20 உலகக் கோப்பை: தேதி, இடம் அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை: தேதி, இடம் அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் தேதியையும் இடத்தையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது

16 அணிகள் பங்கேற்கும் ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதைக் கருத்தில்கொண்டு டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா என்பது குறித்து சூழ்நிலையை ஆய்வு செய்து முடிவெடுக்க ஜூன் 28ஆம் தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐசிசி கால அவகாசம் அளித்தது.

இதற்கிடையே டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீகரத்துக்கு மாற்றப்பட இருக்கிறது என்றும் அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் இந்த போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டிகள் நடைபெறும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

-ராஜ்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வியாழன் 1 ஜூலை 2021