மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

தனுஷ் ; அப்போ அமெரிக்கா... இப்போ ஹைதராபாத் !

தனுஷ் ; அப்போ அமெரிக்கா... இப்போ ஹைதராபாத் !

ஹாலிவுட் திரைப்படமான ‘க்ரே மேன்’ படத்தில் நடிக்க கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் தனுஷ். அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸூக்காக உருவாகிவரும் இப்படத்தில் நடித்துமுடித்திருக்கிறார் தனுஷ். கடந்த வாரம் சென்னை திரும்பிய தனுஷ், அடுத்தப் படத்தை உடனடியாகத் துவங்குவார் என்று சொல்லப்பட்டது.

க்ரே மேன் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பே ‘தனுஷ் 43’ துவங்கிவிட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இப்படம் உருவாகிவருகிறது. தனுஷூக்கு ஜோடியாக மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நடித்துவருகிறார். படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ஏற்கெனவே முடிந்துவிட்டது.

தற்பொழுது, அடுத்தக் கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் துவங்குகிறது. அதாவது, ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு திரும்பியிருக்கும் தனுஷ், கோலிவுட் படத்துக்காக டோலிவுட்டுக்குச் சென்றிருக்கிறார்.

டோலிவுட்டின் பிரபலமான ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ‘தனுஷ் 43’ படப்பிடிப்பு துவங்குகிறது. ஹைதராபாத்துக்குச் சென்றிருக்கும் தனுஷின் புகைப்படமொன்றும் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தனுஷ் 43 படமானது 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பும் முடிய இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் சென்னை திரும்புகிறார் தனுஷ்.

தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்கு நடுவே, ஷார்ட் டைமில் முடியும் விதத்தில் மித்ரன் ஜவகர் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல் . சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஆறு வருடங்களுக்குப் பிறகு அனிருத் இசையில் நடிக்கிறார் தனுஷ்.

அனிருத் - தனுஷ் காம்பினேஷனில் கொலவெறி பாடல் உலகளவில் வைரலானது. நடுவே கருத்துவேறுபாட்டினால் இருவரும் பிரிந்தனர். தற்பொழுது, மித்ரன் ஜவஹர் படம் மூலமாக வைரல் காம்போ இணைகிறது.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 1 ஜூலை 2021