மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

அடுத்தடுத்து ஆறு படங்கள்.. நயன்தாரா முதலில் நடிக்கும் படம் இதுதான்!

அடுத்தடுத்து ஆறு படங்கள்.. நயன்தாரா முதலில் நடிக்கும் படம் இதுதான்!

ஆர்.ஜே.பாலாஜியுடன் நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்குப் பிறகு, சோலோ ஹீரோயினாக நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’ நயன்தாராவுக்கு அடுத்ததாக சோனி லிவ் ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தாவுடன் நடித்துவரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் சில நாட்கள் நடிக்க இருக்கிறார்.

இப்படத்துக்குப் பிறகு, அடுத்தடுத்து ஆறு படங்கள் நடிக்க மூன்று தயாரிப்பு நிறுவனங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் நயன்தாரா. அதாவது, ட்ரீம் வாரியஸ் தயாரிப்பில் இரண்டு படங்கள், அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு இரண்டு படங்கள் மற்றும் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இரண்டு படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதில், முதலாவதாக ட்ரீம் வாரியஸ் நிறுவனத்தின் படங்களைத் துவங்குகிறார். இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் துவங்குவதாகவும் சொல்லப்படுகிறது. முதலாவதாக, எலி, தெனாலிராமன் படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர்ஸின் மற்றுமொரு படத்தை விக்னேஷ் எனும் அறிமுக இயக்குநர் இயக்க இருப்பதாக தகவல்.

சுவாரஸ்யமான அப்டேட் என்னவென்றால், படத்துக்கு ‘ஆக்ஸிஜன்’ என பெயர் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சமூக கருத்துள்ள படமாக, சமூகப் பிரச்னையைப் பேசும் படமாக இருக்குமாம். கொஞ்சம் சீரியஸான கேரக்டரில் நடிக்கிறாராம் நயன்தாரா.

இவ்விரு படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

வியாழன் 1 ஜூலை 2021