மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

சென்னையில் தொடங்கிய ‘பீஸ்ட்’ ஷூட்டிங்!

சென்னையில் தொடங்கிய ‘பீஸ்ட்’ ஷூட்டிங்!

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று (ஜூலை 1) தொடங்கியது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் படம் 'பீஸ்ட்'. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணிபுரிகிறார். கடந்த ஜூன் 22 விஜய் பிறந்தநாள் அன்று இப்படத்தின் முதல் பார்வையை அடுத்தடுத்து இருமுறை படக்குழு வெளியிட்டது.

இப்படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காகச் சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் கொரோனா 2-வது அலையின் தீவிரத்தால் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது இதன் காரணமாக சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கு ஒன்றில் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது.

படப்பிடிப்பு சம்பந்தமான பணிகளில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி, போட்டிருக்கவேண்டும், உடல் வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு தளத்திற்குள் கைபேசி பயன்படுத்தவும், புகைப்படங்கள் எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

வியாழன் 1 ஜூலை 2021