மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

இந்தியன்-2 தீர்ப்பு : மத்தியஸ்தரிடம் அறிக்கை கேட்கும் நீதிமன்றம்!

இந்தியன்-2 தீர்ப்பு : மத்தியஸ்தரிடம் அறிக்கை கேட்கும் நீதிமன்றம்!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’.

கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற கிரேன் விபத்தில் மூவர் மரணம் அடைந்ததை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன்பின் கொரானோ முதல் அலை வந்ததால் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இதனிடையே, ஷங்கர் தெலுங்கில் ஒரு படத்தையும், ஹிந்தியில் ஒரு படத்தையும் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

அப்போது, லைகா நிறுவனம் தங்களது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை முடிக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழி தயாரிப்பாளர்கள் சங்கங்களிலும் ஷங்கர் புதிய படங்களை இயக்க ஒத்துழைப்பு தரக்கூடாது என்று வேண்டுகோள் புகார் கடிதம் கொடுத்துள்ளது லைக்கா நிறுவனம்.

நீதிமன்ற ஆலோசனையின்படி லைகா - ஷங்கர் தரப்புக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் வெற்றியடையவில்லை. அதனால், இரு தரப்பும் மீண்டும் நீதிமன்றத்தையே நாடியது. நேற்று(30.06.2021)வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிரச்சினைக்குத் தீர்வு காண மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

நீதிபதி ஆர்.பானுமதியின் அறிக்கைக்குப் பிறகு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

-இராமானுஜம்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வியாழன் 1 ஜூலை 2021