மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

யோகி பாபு செய்யும் ஆச்சரியம்!

யோகி பாபு செய்யும் ஆச்சரியம்!

தெலுங்கில் நானி நடித்து வெளியான ‘நின்னுக்கோரி’ படத்தின் தமிழ் ரீமேக் ‘தள்ளிப்போகாதே’. அதர்வா ஹீரோவாக நடிக்க படம் தயாராகி வருகிறது. தொடர்ந்து, மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கும் உருவாகி வருகிறது. இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இவ்விரு படங்களையும் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், அடுத்தப் படத்தில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார் ஆர்.கண்ணன். வருடத்திற்கு ஒரு படமென இயக்கிக் கொண்டிருந்தவர் , தற்பொழுது அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

நகுல், சுனைனா நடிக்க ‘எரியும் கண்ணாடி’ எனும் படமும் ஆர்.கண்ணனின் லைன் அப்பில் இருக்கிறது. தற்பொழுது, புதுப் படமொன்றை துவங்குகிறார். அந்தப் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்கிறார். சிவாவுடன் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அஜித், விஜய் என பெரும் நட்சத்திரங்களின் படங்களுக்கு மத்தியில் சின்ன பட்ஜெட் படங்களிலும் கவனம் செலுத்தவும் தவறவில்லை யோகிபாபு.

யோகிபாபு & மிர்ச்சி சிவா காம்போவில் கலகலப்பு மற்றும் கலகலப்பு 2 படங்கள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, இந்தக் கூட்டணியில் சுமோ படம் வெளியாக இருக்கிறது. நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்திருக்கிறது.

யோகிபாபு குறித்த சுவாரஸ்ய ஒற்றுமையும் ஒன்றிருக்கிறது. அஜித்துடன் வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களில் நடித்த யோகிபாபு, நான்காவது முறையாக வலிமை படத்தில் நடித்துவருகிறார். அதுபோல, மெர்சல், சர்க்கார் மற்றும் பிகில் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். ஆச்சரியமாக, பட்டத்துயானை, அயோக்யா மற்றும் ஆக்ஷன் படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் யோகிபாபு நான்காவது முறையாக தற்பொழுது இணைந்து நடிக்கிறார். இந்த வரிசையில் மெர்ச்சிசிவா உடனும் நான்காவது முறையாக இணைந்திருக்கிறார்.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

வியாழன் 1 ஜூலை 2021