மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

சொன்ன தேதியில் வெளியாகுமா RRR?

சொன்ன தேதியில் வெளியாகுமா RRR?

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களை ஒரு மொழியில் மட்டும் ரிலீஸ் செய்தால் பட்ஜெட்டுக்கேற்ற வசூலைப் பெறுவது கஷ்டம். அதனால், பெரிய பட்ஜெட் படங்களை PAN இந்திய அளவில் ரிலீஸ் செய்து வெற்றியைப் பெற முடியும் என்கிற நம்பிக்கையைத் தயாரிப்பாளர்கள் மத்தியில் விதைத்ததில் முன்னோடி இயக்குநர் ராஜமெளலி.

சமீபத்தில் எக்கச்சக்கமாக PAN இந்தியா ரிலீஸுக்குப் படங்கள் தயாராகி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் நம்பிக்கைக் கொடுத்தப் படம் பாகுபலி. ராஜமெளலியின் பிரமாண்ட படைப்பாக வெளியாகி பெரிய ஹிட் கொடுத்தது பாகுபலி. அடுத்ததாக, ராஜமெளலியின் இயக்கத்தில் உருவாகிவரும் அடுத்த படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.

இந்தப் படத்துக்கு தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக படம் தாமதமானது. இந்த ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் லீட் ரோலில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் நம்ம ஊர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையினாலும், படப்பிடிப்பு அனுமதி கிடைப்பதில் இருந்த சிக்கல்களினாலும் படம் வெளியாவது சந்தேகமே என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில், திடீரென அப்டேட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது படக்குழு. பொதுவாக, ஒரு படத்தின் அப்டேட் எப்போது வருகிறது என்பதற்கே ஒரு அப்டேட் வரும். அப்படி, எதுவுமில்லாமல் திடீரென அறிவிப்பைக் கொடுத்தனர் படக்குழுவினர். ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகவும், இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, ஜூனியர் என்.டி.ஆர் & ராம் சரண் இருவருமே இரண்டு மொழிகளுக்கான டப்பிங் வேலைகளையும் முடித்துவிட்டார்களாம். விரைவில் மற்ற பணிகளையும் முடித்துவிட திட்டத்தில் இருக்கிறார்கள் படக்குழுவினர். இந்த அறிவிப்பினால், படம் வேகமாக நகர்ந்துவருவது தெரிகிறது. இந்திய அளவில் கொரோனாவும் குறைந்துவரும் சூழல் நிலவுவதால் இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், குறிப்பிட்ட தேதியில் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகும் என்கிறார்கள்.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 30 ஜுன் 2021