மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

அக்‌ஷய்குமார் உடைக்கப் போகும் அடுத்த தமிழ் ஃபர்னிச்சர் !

அக்‌ஷய்குமார் உடைக்கப் போகும் அடுத்த தமிழ் ஃபர்னிச்சர் !

பாலிவுட்டின் பிஸியான நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய்குமார். வருடத்துக்கு எப்படியும் நான்கைந்து படங்கள் கொடுத்துவிடுகிறார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக 2.O படத்திலும் நடித்தார்.

இறுதியாக, அக்‌ஷய்குமார் நடித்து வெளியான படம் ‘லக்‌ஷ்மி’. தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான காஞ்சனா படத்தின் ரீமேக். தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படமானது இந்தி வெர்ஷனில் படுதோல்வியைச் சந்தித்தது. படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே வந்தது.

இந்நிலையில், மீண்டுமொரு தமிழ் ஹிட் படத்தின் ரீமேக்கை கையில் எடுத்திருக்கிறார் அக்‌ஷய்குமார். விஷ்ணுவிஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ல் வெளியான படம் ராட்சசன். இந்தப் படத்தின் சூடானது ரசிகர்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை. த்ரில்லர் ஜானரில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. சொல்லப் போனால், விஷ்ணுவிஷாலுக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்தப் படம் ராட்சசன். தெலுங்கில் ராக்‌ஷஷடு எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஆந்திராவிலும் பெரிய ஹிட்டானது.

அடுத்ததாக, ராட்சசன் படமானது இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில், நாயகனாக அக்‌ஷய்குமார் நடிக்கிறார். கூடுதலாக, இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளையும் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல். தவிர, அமலாபால் கேரக்டரில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

தொடர்ச்சியாக மர்மமான முறையில் பள்ளிச் சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலைகளை செய்யும் சைக்கோவை போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடித்தார் என்பதற்குள் பல திருப்பங்களுடன் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். இந்தப் படத்தின் ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிக்கப் போவதற்கு இணையத்தில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். தமிழிலிருந்து மீண்டுமொரு ஃபர்னிச்சரை உடைக்கப் போகிறார் அக்‌ஷய் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

என்ன ஆனாலும், ராட்சசன் படத்தில் அக்‌ஷய் நடிப்பது உறுதி. இந்த வருடத்தின் முதல் ரிலீஸாக ‘பெல்பாட்டம்’ படம் வருகிற ஜூலை 27ஆம் தேதி அக்‌ஷய்குமாருக்கு வெளியாக இருக்கிறது. தொடர்ந்து சூரியவம்ஷி, தனுஷூடன் நடித்திருக்கும் அட்ராங்கி ரே மற்றும் ப்ரித்விராஜ் படங்கள் இந்த வருடம் அடுத்தடுத்து வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

புதன் 30 ஜுன் 2021