மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

கஸ்தூரியிடம் போனில் பேசினாரா ?: ரஜினி தரப்பு விளக்கம் !

கஸ்தூரியிடம் போனில் பேசினாரா ?:  ரஜினி தரப்பு விளக்கம் !

மருத்துவ பரிசோதனைக்காக தனி விமானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார் ரஜினி. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த சில மாதமாக சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல முடியாமல் இருந்த சூழலில் அரசிடம் அனுமதி பெற்று அமெரிக்கா சென்றார்.

தனுஷின் மனைவியும், ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா உடனிருந்து கவனித்துவருகிறார். அமெரிக்காவிலுள்ள மாயோ மருத்துவமனையிலிருந்து ரஜினியும், ஐஸ்வர்யாவும் வெளியே வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இரண்டு வாரங்கள் மருத்துவ பரிசோதனைக்காக அங்கு இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

ரஜினியின் மருத்துவ பயணம் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு ட்விட் ஒன்றைப் போட்டிருந்தார். அதில், இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், இங்கிருந்து வருபவர்களுக்கு தடை விதித்துள்ளது அமெரிக்கா. அதையும் தாண்டி, எப்படி அனுமதி பெற்று ரஜினி செல்லலாம் என்று பதிவிட்டார். இந்தப் பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், மீண்டும் ஒரு ட்விட் ஒன்றைப் பதிவிட்டார். அதில், “ அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி ! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம் !” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஜினியின் செய்தித் தொடர்பாளரான ரியாஸ் அகமது ட்விட்டரில் , “ தலைவரோ ,தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை , எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்” என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து, ரஜினியின் தரப்பிலிருந்து யாரும் நடிகை கஸ்தூரியிடம் பேசவில்லை என்பது தெளிவாகிறது. ரஜினியைப் பற்றி சர்ச்சையாக கருத்து கூறியது ஏன் என்பதும், பின்னர் ரஜினியிடம் பேசிவிட்டேன் என ஒரு ட்விட் போட்டது ஏன் என்பதும் நடிகை கஸ்தூரிக்கு மட்டுமே தெரியும்.

- ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

புதன் 30 ஜுன் 2021