மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்?

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்?

கமல்ஹாசன் கைவசம் மூன்று படங்கள் இருக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் கமலின் இயக்கத்தில் ‘தலைவன் இருக்கின்றான்’.

இந்த மூன்று படங்களில் ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துவிட்டது. மீதிப் படப்பிடிப்பு முடிவதற்குள் இயக்குநருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையிலான சிக்கலால் படப்பிடிப்பு தடைபட்டு நிற்கிறது.

பரபரப்பான தேர்தலைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசன், அடுத்த கட்டமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு இசை அனிருத். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், அர்ஜுன் தாஸ், நரேன் மற்றும் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்கள்.

விக்ரம் படத்தைத் தொடந்து, கமல் இயக்கி தயாரிக்க ‘தலைவன் இருக்கின்றான்’ படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷம் 2 ரீமேக்காக ‘பாபநாசம் 2’ படத்தைத் தொடங்கும் திட்டத்திலும் இருந்தார் கமல். இந்த நிலையில், கமல்ஹாசனை இயக்க இளம் இயக்குநர் தயாராகிவருவதாகச் சொல்லப்படுகிறது.

தமிழின் முக்கிய இளம் இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஒரு தகவல்.

சூரி ஹீரோவாக நடிக்க உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தினை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து இயக்கி வருகிறார் வெற்றி மாறன். இந்தப் படத்துக்குப் பிறகு, சூர்யா நடிக்க தாணு தயாரிப்பில் ‘வாடிவாசல்’ தொடங்க திட்டமிட்டிருக்கிறார் வெற்றி மாறன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, கமல்ஹாசனை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறதாம்.

- ஆதினி

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

புதன் 30 ஜுன் 2021