மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

விம்பிள்டன்: காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேறிய செரீனா வில்லியம்ஸ்

விம்பிள்டன்: காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேறிய செரீனா வில்லியம்ஸ்

காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே செரீனா வில்லியம்ஸ் வெளியேறியுள்ளார்.

ஆண்டுதோறும் நான்கு வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டில் மூன்றாவதும், மிக உயரியதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று (ஜூன் 29) தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்த முறை கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதையொட்டி அங்கு முகாமிட்டுள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றவரும் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பெலாரஸ் நாட்டின் அலைக்சண்ட்ரா ஸஸ்னோவிச் எதிர்த்து செரீனா வில்லியம்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, டென்னிஸ் களத்தில் கால் சறுக்கியதால் இடது கணுக்காலின் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். சிறிய முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து விளையாட முயற்சி செய்தார். 34 நிமிடங்கள் ஆடி 3-3 என்ற கணக்கில் இருந்த நிலையில், வலி அதிகமானதால் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.

இதனால் முதல் சுற்றிலேயே நடப்பு விம்பிள்டன் தொடரில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். இதன் மூலம் எட்டாவது முறையாக விம்பிள்டன் பட்டம் வெல்லும் செரீனா வில்லியம்ஸின் கனவு தகர்ந்துள்ளது, அவரின் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

புதன் 30 ஜுன் 2021