மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 ஜுன் 2021

‘டெடி 2’வா? எப்படி இருக்கப் போகிறது ஆர்யா நெக்ஸ்ட்!

‘டெடி 2’வா? எப்படி இருக்கப் போகிறது ஆர்யா நெக்ஸ்ட்!

கமர்ஷியல் மசாலா படங்களுக்கு நடுவே, நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் ஆர்யா. நான் கடவுள், மதராசப்பட்டினம், அவன் இவன், பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை, காடன், மகாமுனி என கவனிக்கத்தக்கப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

ஆர்யாவுக்கு அடுத்த ரிலீஸ் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 80-களில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியை மையமாகக் கொண்டு படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஆர்யாவுடன் நடித்துவரும் எனிமி படமும் வெளியாக இருக்கிறது. இவற்றோடு, சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 படமும் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது.

இந்த வருடம் ஆர்யாவுக்குப் பெரிய வரவேற்பை டெடி படம் கொடுத்திருக்கிறது. ஆர்யாவுடன் சாயிஷா இணைந்து நடித்திருந்தார். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ். சமீபத்தில் தொலைக்காட்சியிலும் படம் ஒளிபரப்பானது. அப்போது, டிவி டி.ஆர்.பி-யில் 11.9 ரேட்டிங் பெற்றது. இதனால், டெடி படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் டெடி கூட்டணி இணைகிறது. டெடி இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜனின் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார். டெடி படத்தில் பணியாற்றும்போதே ஆர்யாவின் ஃபேவரைட் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டார் சக்தி சவுந்தர்ராஜன். அதனால், மீண்டும் இணையும் இந்தக் கூட்டணி டெடி 2 படத்தை எடுக்கவில்லையாம்.

டெடி 2 எடுக்கலாமா என தொடர்ந்து பேச்சுவார்த்தைப் போயிருக்கிறது. இறுதியாக, இப்போதைக்கு டெடி 2 வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார் ஆர்யா. சக்தி சவுந்தர்ராஜன் புதிதாக ஒரு கதையைத் தயார் செய்துவருகிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் என்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும் என்கிறார்கள்.

ஆர்யாவை இயக்க இரண்டு இயக்குநர்கள் ஒரே நேரத்தில் தயாராகிவருகிறார்கள். ஒருவர் சக்தி சவுந்தர்ராஜன். மற்றொருவர் நலன் குமாரசாமி. இருவரில் யார் கதை முதலில் தயாராகிறதோ, அந்தப் படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கிவிடும் திட்டத்தில் இருந்தார் ஆர்யா. இப்போதைய நிலவரப்படி, சக்தி சவுந்தர்ராஜனின் படம் முதலில் தொடங்கும் என்று தெரிகிறது. படத்தின் கதையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறாராம். எப்படியும், அக்டோபரில் படம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. படத்தை மூன்று மாதத்தில் முடிக்கவும் திட்டமாம்.

சிபி ராஜ் நடிக்க நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, ஜெயம் ரவி உடன் மிருதன், டிக்டிக்டிக் தொடர்ந்து, ஆர்யாவுக்கும் இரண்டு படங்கள் இயக்குகிறார் சக்தி சவுந்தர்ராஜன்.

-ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

செவ்வாய் 29 ஜுன் 2021