மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

ஈசி மாஸ்க்: அப்டேட் குமாரு

ஈசி மாஸ்க்: அப்டேட் குமாரு

மாஸ்க் போடறதுக்கு ரொம்ப சிரமமா இருக்குனு இப்ப ஈசி மாஸ்க்னு ஒண்ணு வந்திருக்குதாம். மூக்கோட ரெண்டு துளைகள்ல மட்டும் மாட்டிக்கிற மாதிரி ரொம்ப சின்னதா இருக்கு. இதை வாங்கிப் போட்டுக்கிட்டா இப்படி எல்லாரும் அனுமார் மாதிரி இருக்க வேண்டில்லனு வாட்ஸ் அப்ப பாத்துட்டு வீட்ல பொண்டாட்டி ஒரே தொந்தரவா இருக்குதுனு அண்ணன் ஒருத்தர் சொன்னாரு. கொரோனாவால அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினைனா வீட்டம்மாக்களோட பிரச்சினைய பாத்தீங்களா? மாஸ்க் போடவே இவ்வளவு அலுப்புப் பட்டாங்கன்னா... இவங்களுக்கெல்லாம் எத்தனை அலைதான் இன்னும் வரணுமோ?

நீங்க அப்டேட் பண்ணுங்க

amudu

முன்பு பவர் கட் ஏற்பட்டால், மின்சார வாரியத்தை மட்டும் திட்டிக் கொண்டிருந்தவர்கள், இப்போது அணிலையும் சேர்த்து திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

ரஹீம் கஸ்ஸாலி

லிட்டர் பெட்ரோல் 100-யை தாண்டி விட்டது முதல்வர் என்ன செய்ய போகிறார்?

- வானதி சீனிவாசன் கேள்வி

என்ன செய்றீங்கன்னு அப்படியே மோடிகிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடுங்க மேடம்!

சரவணன். ℳ

அன்புமணி ராமதாஸ் ~ கொரோனாவை சரியான முறையில் கையாண்டிங்க...

அரசு ~ நன்றிங்க..

~ வன்னியர் போராட்ட வழக்கை திரும்பப்பெறணும்...

நெல்லை அண்ணாச்சி

மின்துறையில் " இழப்பு " தான்..

ஊழல் இல்லை...

முன்னாள் அமைச்சர் தங்கமணி

பூ வை... பூ ன்னும் சொல்லலாம்

புயிப்பம் ன்னும் சொல்லலாம்...!!!

நெல்லை அண்ணாச்சி

ஏன் அண்ணே

அவரை அடிச்சிங்க...

100 ரூ பெட்ரோல் பற்றி

" மன் கி பாத் " ல பேசுனாரா ன்னு கேக்குறான்....!!

Newton

30 வயதில் எடை குறைப்பதை விட 40 வயதில் குறைப்பது கடினம். 50 வயதில் அதை விடக் கடினம். அதனால், நமக்குதான் எடை குறைக்கிற அனுபவம் ஏற்கெனவே இருக்கே என்று மெத்தனமாக இருந்து எடை போட்டு விடாதீர்கள்.

balebalu

கொரோனா பரமபத விளையாட்டில் மட்டும் இறங்குமுகம் நல்லது

தர்மஅடி தர்மலிங்கம்

நான் ஒரு பறவை எனக்கு பயணிக்க பாதைகள் கிடையாது, நான் பயணிக்கும் இடமெல்லாம் எனக்கு பாதை தான்!

மயக்குநன்

அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவுக்கு அழைப்பு!- தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

இபிஎஸ்- ஓபிஎஸ்: அப்புறம் என்ன... கூண்டோட நீக்கம் செஞ்சு ஓர் அறிக்கை விட்டுரலாமாப்பா..?!

சரவணன். ℳ

பிரதமர் தமிழ் மொழியை புகழ்ந்து பேசுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

ஆச்சரியம் என்னன்னா, எலக்சன் கூட இல்லாத இந்த நேரத்தில் புகழ்வது தான் ஆச்சரியம் அளிக்கிறது..!

கோழியின் கிறுக்கல்

கொரோனாவினால் கல்யாணத்துக்கு போக முடியலை, கருமாதிக்கு போக முடியலைன்னு கூட வருத்தமா இல்லை,

ஆனா கிடாய் விருந்துக்கு போக முடியலைங்கிறது தான் மனசை தீயா சுடுது!

-லாக் ஆஃப்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

திங்கள் 28 ஜுன் 2021