மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

நயன்தாரா படத்தில் 11 பாடல்கள்... அப்படியென்ன ஸ்பெஷல்?

நயன்தாரா படத்தில் 11 பாடல்கள்... அப்படியென்ன ஸ்பெஷல்?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்திலும் விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார். சோலோ ஹீரோயினாக நடித்துவரும் ‘நெற்றிக்கண்’ படம் விரைவில் சோனி லிவ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

அடுத்தடுத்து ஆறு படங்களை நயன்தாரா கமிட் செய்து வைத்திருக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்கள், அபிஷேக் பிலிம்ஸ்’ தயாரிப்பில் இரண்டு படங்கள் மற்றும் ஐசரி கணேஷ் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்க இருக்கிறார். இந்தப் படங்களெல்லாம் அடுத்தடுத்து துவங்க இருக்கிறது.

தமிழில் சோலோ ஹீரோயினாக கலக்கிவந்தாலும் மலையாளத்திலும் அவ்வப்போது படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். மம்முட்டியுடன் ‘புதிய நியமம்’ மற்றும் நிவின்பாலியுடன் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படம் வெளியானது. கடந்த ஏப்ரலில் குஞ்சக்கோ போபன் உடன் நடித்த ‘நிழல்’ வெளியானது.

மலையாளத்தில் நயன் நடிக்க அடுத்ததாக உருவாகிவரும் படம் ‘பாட்டு’. பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். நாயகனாக ஃபகத் ஃபாசில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு இசையமைக்கும் பணியையும் அல்போன்ஸ் புத்திரன் மேற்கொள்ள இருக்கிறார். புது அப்டேட் என்னவென்றால், நயன் நடிக்கும் இந்தப் படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற இருக்காம். படத்தில் பிரதானமே பாடல்கள் தானாம். மியூசிக்கல் படமாக இருக்குமென்பதால் அதிக பாடல்கள் இடம்பெறுகிறதாம். படமே பாடல்களாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

80களின் சினிமாக்களில் ஒரு படத்தில் 10க்கு மேல் பாடல்கள் இருக்கும். அது காலப் போக்கில் குறைந்தது. படத்துக்கு நான்கு பாடல்கள் என்றானது. சமீபமாக, பாடல்களே இல்லாமல் படங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், ரெட்ரோ ஸ்டைலில் 11 பாடல்களை படத்தில் வைத்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். அல்போன்ஸ் புத்திரனின் நேரம் மற்றும் பிரேமம் படங்களில் பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட். ஒவ்வொரு பாடல்களுமே கேட்பதற்கு வெரைட்டியாகவும் இருக்கும். அதனால், ‘பாட்டு’ படத்தின் பாடல்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

- ஆதினி

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

திங்கள் 28 ஜுன் 2021