மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

அசுரன் ரீமேக் : நினைத்ததொன்று, நடப்பது வேறு !

அசுரன் ரீமேக் : நினைத்ததொன்று, நடப்பது வேறு !

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, கென், தீஜே, நரேன் நடித்து வெளியான படம் `அசுரன்'. எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலைத் தழுவி இந்தப்படம் உருவானது. குறைவான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்தது.

அசுரன் படத்துக்கு கிடைத்த வரவேற்பினால், தெலுங்கில் அசுரனை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டினார் நடிகர் வெங்கடேஷ். பொதுவாக, மற்ற மொழிகளில் ஹிட்டாகும் படங்களையெல்லாம் பெரும்பாலும் தெலுங்கில் ரீமேக் செய்வது நடிகர் வெங்கடேஷ் தான். சூர்யவம்சம், சின்னத்தம்பி, சின்னக் கவுண்டர், ஜெமினி, காக்க காக்க, இறுதிச்சுற்று என்று ஒரு பெரிய லிஸ்டே சொல்லலாம். இந்த வரிசையில் தனுஷின் அசுரன் படத்தையும் கையில் எடுத்தார்.

அசுரன் படத்துக்கான தெலுங்கு ரீமேக் உரிமையை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் வாங்கியது. அதன்படி, படத்துக்கு `நாரப்பா' எனும் டைட்டிலும் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் வெங்கடேஷ் உடன் ப்ரியாமணி, கார்த்திக் ரத்னம், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் அம்மு அபிராமி நடித்த ரோலில் தெலுங்கில் அமலாபால் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை கடந்த மே 14-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாக படம் வெளியாக முடியவில்லை.

இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டுமென்பதே நடிகர் வெங்கடேஷ் விருப்பம். ஏனெனில், சாதிய சிக்கல்களைப் பேசியிருப்பதால், வெகுஜன மக்கள் மத்தியில் படம் சென்று சேர வேண்டும் என விரும்புகிறாராம். திரையரங்கில் வெளியானால் மட்டுமே அனைத்து மக்கள் மத்தியிலும் படம் சென்று சேரும். ஆனால், சங்கடமான சூழல் என்னவென்றால், படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்திருக்கிறது.

முதல் அலையின் போது துவங்கிய படம் , இரண்டாம் அலையால் சிக்கி வெளியாக முடியாமல் தவிக்கிறது. அடுத்து, மூன்றாம் அலை வந்துவிடும் என்கிற அச்சம் நிலவுவதால் திரையரங்குக்கு மக்கள் வரவே அஞ்சுகிறார்கள். அதனால், நேரடியாக ஓடிடியில் வெளியிட்டுவிட்டு, உடனடியாக டிவி ஒளிபரப்புக்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

- ஆதினி

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

திங்கள் 28 ஜுன் 2021