மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

விஜய்சேதுபதி கேட்ட சம்பளத்தை கமல் கொடுப்பாரா?

விஜய்சேதுபதி கேட்ட சம்பளத்தை கமல் கொடுப்பாரா?

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நம்பிக்கைக்குரிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நம்பிக்கைக்குரியவர் என்பதற்கு காரணம், கதை கேட்காமலேயே படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்களும், நடிப்பதற்கு நடிகர்களும் ஒப்புக் கொள்வார்கள். ரசிகர்களும் ஆவலுடன் படத்தை எதிர் நோக்கிக் காத்திருப்பார்கள். அப்படியான நம்பிக்கையை கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் ஏற்படுத்திவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

அடுத்ததாக, கமல்ஹாசன் நடிக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் உருவாகிவருகிறது விக்ரம். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு ஜூலையில் துவங்கும் என்று சொல்லப் படுகிறது. அதனால், நடிக நடிகர்களை உறுதி செய்யும் வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது.

ஹீரோ கமலுக்கு எதிராக பல நெகட்டிவ் கேரக்டர்கள் படத்தில் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. முக்கிய லீட் ரோலில் நடிக்க மலையாள நடிகர் பகத் பாசில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அதோடு, கைதி , மாஸ்டரில் லோகேஷூடன் டிராவல் செய்யும் அர்ஜூன் தாஸ் நடிக்க இருக்கிறார். லோகேஷின் மற்றுமொரு நடிகரான நரேன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தகவல். இவர், கைதி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தவிர, விஜய்சேதுபதி முக்கிய லீட் ரோலில் நடிக்க இருக்கிறார். ஆனால், இவர் நடிப்பது இன்னும் ஒப்பந்தமாகவில்லை. ஏனெனில், விக்ரம் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி 15 கோடி சம்பளம் கேட்டதாகத் தெரிகிறது. இதனால், அவசியம் அவரை நடிக்க வைக்க வேண்டுமா என யோசித்துவருகிறாராம் கமல்.

விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடித்தியிருக்கிறார் லோகேஷ். அதன்பிறகு, விஜய்சேதுபதியிடமும் சம்பளம் குறைப்பது குறித்து பேசியும் வருகிறாராம். இவருடன் நடுவில் நம்பிக்கைக்குரியவராக இருந்து சம்பளச் சிக்கலை இருவரின் மனதும் புண்படாமல் சரிசெய்யும் வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதிக்கு வேற லெவல் கேரக்டரைக் கொடுத்தவர் லோகேஷ். அதுபோல, விக்ரமும் இருக்குமாம். விஜய்சேதுபதி கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர் கமல்ஹாசன் கொடுப்பாரா என்று விசாரித்தால், லோகேஷ் கொடுத்த உத்திரவாதத்தால் நிச்சயம் கொடுக்கச் சம்மதிப்பார் என்கிறார்கள்.

தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 28 ஜுன் 2021