மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

இருவேறு பாதையில் பயணிக்கும் சந்தானம் & அருண் விஜய்

இருவேறு பாதையில் பயணிக்கும் சந்தானம் & அருண் விஜய்

கொரோனா சூழலிலும் திரையரங்கில் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்வது என்பதில் உறுதியாக இருந்தார் சந்தானம். திரையரங்குக்கு மக்கள் வரவே அச்சப்பட்ட சூழலிலும், சென்ற ஆண்டு டகால்டி, பிஸ்கோத் படங்கள் நேரடியாகத் திரையரங்கில் வெளியானது.

இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் படம் தியேட்டரில் வெளியானது. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்தடுத்து நான்கு படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. அதாவது, டிக்கிலோனா, சர்வர் சுந்தரம், சபாபதி மற்றும் கொரோனா குமார் படங்கள் இருக்கின்றன. இவற்றோடு மன்னவன் வந்தானடி படமும் தயாராகிவருகிறது. இதில், சர்வர் சுந்தரம், டிக்கிலோனா படங்கள் தயாராகிவிட்ட நிலையிலும் ரிலீஸ் ஆக முடியாமல் தவித்து வருகின்றன.

இந்த நிலையில், திரையரங்கத் திட்டத்துக்கு நடுவே ஓடிடியில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படி, தமிழில் களமிறங்கியிருக்கும் சோனி லைவ் ஓடிடியில் சந்தானத்தின் ‘சபாபதி’ படத்தை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே முக்கிய ரோலில் நடித்துள்ளனர். விரைவிலேயே, இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

மாஞ்சா வேலு, மலை மலை மாதிரியான படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர், தடையறத் தாக்க படத்துக்குப் பிறகு படத்தேர்வில் புது பாணியைத் தேர்ந்தெடுத்தார். என்னை அறிந்தால் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த அருண் விஜய்க்கு குற்றம் 23, தடம் படங்கள் நல்ல ஹிட் கொடுத்தன. அடுத்தடுத்து நான்கைந்து படங்கள் அருண் விஜய்க்கு கைவசம் இருக்கின்றன.

அதில், தேசிய விருது இயக்குநர் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உருவாகிவரும் படம் ‘சினம்’. குற்றம் 23 படத்துக்குப் பிறகு மீண்டும் போலீஸாக நடித்திருக்கிறார். இது, அருண் விஜய்க்கு 30ஆவது படம். அதனால், இந்தப் படத்தின் ரிலீஸில் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார். இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட நடுவில் பேச்சுவார்த்தை நடந்தது.

ஒரு படத்தை முடித்துவிட்டு கையில் வைத்திருப்பது, படத்தின் பட்ஜெட்டை எகிறவிடும். அதனால், ஓடிடிக்காவது கொடுத்துவிடலாம் என்று படத்தயாரிப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது, கொரோனா தாக்கம் குறைந்திருப்பதால் திரையரங்கிலேயே வெளியிட்டுவிட முடிவெடுத்திருக்கிறார்கள். பொதுவாக, நடிகர்களின் 25ஆவது படம், 30ஆவது படம், 50ஆவது படத்தினை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் பெஸ்ட்டாக கொடுக்க விரும்புவார்கள். அதுவும், திரையரங்கில் வெளியாக வேண்டுமென விரும்புவார்கள். அப்படியான படங்கள் ஓடிடிக்குச் செல்வதை எந்த நடிகரும் விரும்ப மாட்டார்கள். ஓடிடிக்குப் போக வேண்டியது, திரையரங்குக்கு வருவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அருண் விஜய்.

- ஆதினி

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

5 நிமிட வாசிப்பு

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

திங்கள் 28 ஜுன் 2021