மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

ரஜினி எப்போது சென்னை திரும்புகிறார்?

ரஜினி எப்போது சென்னை திரும்புகிறார்?

மருத்துவ பரிசோதனைக்காகத் தனி விமானத்தில் அமெரிக்கா சென்றிருக்கிறார் ரஜினி. வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளவே சென்றுள்ளார். தனுஷின் மனைவியும், ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா உடனிருந்து கவனித்து வருகிறார்.

ரஜினிக்கான மருத்துவ பரிசோதனை மாயோ க்ளினிக்கில் நடந்து வருகிறது. ரஜினியும், ஐஸ்வர்யாவும் மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்து ரஜினியின் மருத்துவ பரிசோதனை குறித்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அதில், “ அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம் - நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

எப்போது சென்னை திரும்புகிறார் என விசாரித்தால், இன்னும் இரண்டு வாரங்களில் சென்னை திரும்ப இருக்கிறாராம். சென்னை திரும்பியதும் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளில் இணைகிறாராம் ரஜினி.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, நயன்தாரா , கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘அண்ணாத்த ‘ உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டது. இன்னும், ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருக்காம். டி.இமான் இசையில் படத்தின் இசை உருவாகிவருகிறது. இந்த வருடத் தீபாவளிக்குத் திரையரங்கில் படம் வெளியாக இருக்கிறது.

- ஆதினி

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

திங்கள் 28 ஜுன் 2021