மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

‘பீஸ்ட்‘ ஷூட்டிங் ; தீவிர பயிற்சியில் பூஜா ஹெக்டே

‘பீஸ்ட்‘ ஷூட்டிங் ; தீவிர பயிற்சியில் பூஜா ஹெக்டே

தமிழ், இந்தியில் படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கில் இவர் நடித்து வெளியான ‘புட்டபொம்மா’ பாடலின் மூலம், இந்தியளவில் டிரெண்டிங்கான நடிகையானார் பூஜா ஹெக்டே.

பூஜா ஹெக்டே தற்பொழுது ஹைதராபாத்தில் இருக்கிறார். பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘ராதே ஸ்யாம்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நான்கு நாட்களுக்கான பேட்ச் ஒர்க் மற்றும் பாடல் காட்சி மட்டுமே மீதமிருக்கிறதாம். அதற்கான படப்பிடிப்பே தற்பொழுது போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், விஜய் படத்தில் நடிப்பதற்காக நடன பயிற்சியில் இருக்கிறார் பூஜா ஹெக்டே. அந்த தகவலை இன்ஸ்டாவில் அறிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடக்க இருக்கிறது. அதற்கான, பிரம்மாண்டமான மால் செட் தயாராக இருக்கிறது. ஆனால், குறைவான நபர்களே படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டுமென்பதால், மால் செட் ஷூட்டிங்கிற்கு முன்பாக பாடல் காட்சிக்கான ஷூட்டிங்கை துவங்க இருக்கிறார்கள்.

அதனால், ஜூலையில் ஷூட்டிங் துவங்குவதால் தீவிர நடன பயிற்சியில் இருக்கிறார் பூஜா ஹெக்டே. சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் துவங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த தினத்தில் வெளியாகி வைரலானது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், அனிருத் இசையமைப்பில் ‘பீஸ்ட்’ உருவாகிவருகிறது.

- ஆதினி

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

ஞாயிறு 27 ஜுன் 2021